fbpx
Connect with us

Cinemapettai

பிரபாஸின் 500 கோடி பட்ஜெட் 3டி படத்தில் வில்லன் இந்த முன்னணி நடிகரா? அவர் எப்படி இதுக்கு செட் ஆவாரு!

Tamil Cinema News | சினிமா செய்திகள்

பிரபாஸின் 500 கோடி பட்ஜெட் 3டி படத்தில் வில்லன் இந்த முன்னணி நடிகரா? அவர் எப்படி இதுக்கு செட் ஆவாரு!

இந்திய சினிமாவில் கைவசம் 1500 கோடி பட்ஜெட்டில் படம் நடித்துக் கொண்டிருப்பவர் தான் பிரபாஸ். என்னதான் சினிமா தடுமாற்றத்தை சந்தித்தாலும் படத்துக்குப்படம் இவரது பட்ஜெட் மட்டும் அதிகமாகிக் கொண்டே செல்கிறது.

பாகுபலி என்ற படத்தின் மூலம் மிகப் பெரிய புகழை அடைந்து அதனைத் தொடர்ந்து 400 கோடி பட்ஜெட்டில் சாஹோ படத்தில் நடித்தார். பெரிய அளவு ரசிகர்களிடம் வரவேற்பைப் பெறவில்லை என்றாலும் வசூலில் தாறுமாறாக இருந்தது.

அதனைத் தொடர்ந்து தற்போது ஆயிரம் கோடிக்கு மேல் பிரபாஸை வைத்து படம் தயாரிக்க பல நிறுவனங்கள் பட்ஜெட் ஒதுக்கியுள்ளது. அந்த வகையில் 500 கோடி பட்ஜெட்டில் ராமாயணம் கதையை வைத்து ஆதிபுரூஷ் 3டி படம் ஒன்று உருவாகி இருக்கிறது.

இந்த படத்தில் ராமனாக பிரபாஸ் நடிக்க உள்ளார். அதற்காக தனது வீட்டிலேயே வில்பயிற்சி மேற்கொண்டு வருகிறாராம்.

அதே போல் இந்த படத்தில் வில்லன் கதாபாத்திரம் மிகவும் பிரம்மாண்டமாக அமைய உள்ளதால் அதற்கான மார்க்கெட் உடைய நட்சத்திரம் நடித்தால் நன்றாக இருக்கும் என படக்குழுவினர் கருதியுள்ளனர்.

அதற்கேற்றாற்போல் தற்போது பாலிவுட் சினிமாவின் முன்னணி நடிகரான சைப் அலிகான் இந்த படத்தில் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதுவும் ராவணன் கதாபாத்திரத்தில் என்றால் மிகவும் மிடுக்கான தோற்றம் வேண்டும்.

சைப் அலிகான் இந்த கதாபாத்திரத்திற்கு ஒத்து வருவாரா என்பது சந்தேகம் தான் என்கிறது சினிமா வட்டாரம். இதை படக்குழுவினர் விரைவில் அறிவிக்க உள்ளனர்.

Continue Reading
To Top