fbpx
Connect with us
Cinemapettai

Cinemapettai

பாகுபலி சாதனையை முந்துகிறது பிரபாஸின் ஆதிபுருஷ்.. இது எங்க ஊரு அவதார் என கொண்டாடும் ரசிகர்கள்

prabhas in aadhipurush

Tamil Cinema News | சினிமா செய்திகள்

பாகுபலி சாதனையை முந்துகிறது பிரபாஸின் ஆதிபுருஷ்.. இது எங்க ஊரு அவதார் என கொண்டாடும் ரசிகர்கள்

டோலிவுட்டில் அதிரடி ஆக்ஷன் நாயகனாக அசத்தியவர் பிரபாஸ். பாகுபலி இவரின் இமேஜ்ஜை மாற்றியது. இந்தியா முழுக்க ரீச் ஆனார். பின்னர் இரண்டாம் பாகம் வெளியானதும் மனிதர் உலகளவில் பிரபலம் ஆனார்.  ராதே ஷியாம், ஆதிபுருஷ், சலார் என பிரம்மாண்டமாக உள்ளது இவரது படங்களின் லிஸ்ட்.

ஆதிபுருஷ் ராமாயணத்தை தழுவி 3 டி தொழில்நுட்பத்தில் ரெடியாகும் படம். ஓம் ராவத் இப்படத்தை இயக்குகிறார். ஹிந்தி மற்றும் தெலுங்கில் ஒரு சேர ஷூட்டிங் நடத்தி பின்பு தமிழ், மலையாளம், கன்னடம் என டப்பிங் செய்வது படக்குழுவின் திட்டம்.

ராமராக பிரபாசும், ராவணனாக சைஃப் அலி கானும் நடிக்கிறார்கள். மிகப் பெரிய பொருட் செலவில், இதுவரை கண்டிராத பிரம்மாண்ட படைப்பாக இந்த படம் உருவாக்கப்பட்டு வருகிறது. நம் இந்திய சினிமாவில் விஃஎப்எக்ஸ் (VFX ) ஷாட்களை கொண்ட படமாக பாகுபலி ரெடியானது, அந்த சாதனையை இந்த ஆதிபுருஷ் முந்தப்போகிறது.

பாகுபலி 2 படத்தில் அதிகபட்சமாக 2500 விஷுவல் எஃபெக்ட் ஷாட்கள் வைக்கப்பட்டிருந்தது. ஆதிபுருஷ் படத்தில் 8000 விஎஃப்எக்ஸ் ஷாட்கள் வைக்கப்பட்டுள்ளது என்கின்றனர்.

aadhi purush

இந்த படத்தை 2022 ஆகஸ்ட் மாதம் வெளியிடலாம் என்பது தயாரிப்பு தரப்பின் திட்டம். கொரோனா பரவல் காரணமாக படத்தின் வேலைகள் பாதியில் நிறுத்தப்பட்டுள்ளது, நிலைமை சரியானதும் படப்பிடிப்பை மீண்டும் தொடர திட்டமிடப்பட்டுள்ளது படக்குழு.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading

More in Tamil Cinema News | சினிமா செய்திகள்

அதிகம் படித்தவை

To Top