தந்திரமாக கமலை பகடைக்காயாக யூஸ் பண்ணும் பிரபாஸ்.. இது தெரியாமல் வாண்டடா மாட்டிய உலக நாயகன்

ரஜினியை விட எப்பொழுதும் ஒரு படி கீழேதான் என்று கமலின் நிலைமை இருந்தது. ஆனால் தற்போது இந்த நிலைமை கொஞ்சம் மாறி கமலுக்கு நல்ல மவுசு கூடிக்கொண்டே வருகிறது. இதனால் தமிழ் சினிமாவில் மட்டுமில்லாமல் அனைத்து மொழியிலும் இவர் புராணம் தான் ஒலித்துக் கொண்டிருக்கிறது.

அப்படித்தான் தற்போது கமலின் புகழ் தெலுங்கு தேசத்தில் நாலா பக்கமும் பரவி இருக்கிறது. இதனால் எப்படியாவது இவரை நம் படத்தில் இணைத்து விட்டால் நம்மளும் பெரிய ஆளாக ஆகிவிடலாம். அத்துடன் தமிழ் சினிமாவிலும் தன்னுடைய முத்திரையை பதித்து விடலாம் என்று தந்திரமாக கமலை பகடைக்காயாக யூஸ் பண்ணி வருகிறார் பாகுபலி பிரபாஸ்.

Also read: வம்பை விலை கொடுத்து வாங்கும் கமல்.. உலக நாயகன் அனுபவத்திற்கு தகுதியானவர் ரஜினி தான்

இவர் ஏற்கனவே பாகுபலி படத்தின் மூலம் மிகவும் ஃபேமஸ் ஆகிவிட்டார். ஆனால் அதன்பின் இவர் நடித்து வெளிவந்த சாஹோ, ராதே ஷ்யாம் போன்று அடுத்தடுத்து வெளிவந்த படங்கள் படுதோல்வி அடைந்தது. இது அப்படியே நீடித்து விடக்கூடாது இதற்கடுத்து ஒரு படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களின் மனதில் நச்சென்று ஒரு இடத்தை பிடித்து கொடி கட்டி பறக்கணும் என்ற ஆசையுடன் சுத்தி வருகிறார்.

அந்த நேரத்தில் இவரிடம் வாண்ட்டாக மாட்டிக் கொண்டவர் தான் உலக நாயகன். அதாவது பிரபாஸ் நடிக்க இருக்கும் ப்ராஜெக்ட் K பிரம்மாண்டமான முறையில் எடுக்க வேண்டும் என்பதற்காக பாலிவுட்டில் அமிதாப் பச்சன், தீபிகா படுகோன் மற்றும் வில்லன் கேரக்டருக்கு கமல் என்று பெரிய நடிகர்களை வைத்து எப்படியாவது இப்படத்தை ஹிட் செய்ய வேண்டும் என்று திட்டம் போட்டு வருகிறார்.

Also read: பிரபாஸ் படத்திற்கு கிளம்பும் வதந்திகள்.. அதிரடியாக ரிலீஸ் தேதியை மீண்டும் ஒருமுறை உறுதிப்படுத்திய படக்குழு

ஏற்கனவே தெலுங்கு ஹீரோக்கள் மத்தியில் பிரபாஸுக்கு பெரிதும் போட்டி ஏற்பட்டு வருகிறது. ராம்சரண் மற்றும் ஜூனியர் என்டிஆர் என இவர்கள் அனைவரும் தெலுங்கு மார்க்கெட்டை வளைத்து வைத்திருக்கும் இளம் ஹீரோக்கள். அதனால் இவர்களை பின்னுக்கு தள்ள வேண்டும் என்ற யோசனையில் பிரபாஸ் தந்திரமாக காய் நகர்த்திருக்கிறார்.

மேலும் இப்படம் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகி வருவதால் அதிக அளவில் பொருளாதார ரீதியாக பல சவால்களை சந்திக்க வேண்டியதாக இருக்கும். அதனால் பிரபாஸ் இந்த காரணத்தினால் படத்திற்கு எந்த இடையூறும் வரக்கூடாது என்பதற்காக அவரால் முடிந்தவரை பணம் கொடுத்து உதவி செய்து வருகிறார்

Also read: தேவர்மகன் படத்திற்கு பிறகு கிடைத்த மிகப்பெரிய வாய்ப்பு.. உதயநிதியின் அரசியலை பற்றி பேசிய வடிவேலு