Tamil Cinema News | சினிமா செய்திகள்
பிரபாஸ் மட்டும் இத்தனை கோடி சம்பளம் வாங்குவாராம்.. ஆனால் AR ரஹ்மானுக்கு இவ்வளவு கொடுத்தால் வலிக்குதாம்!
இந்திய அளவில் பிரபல நடிகராக வலம் வருபவர் பிரபாஸ். பாகுபலி படங்களுக்கு பிறகு இவரது ஒவ்வொரு படங்களுக்கும் இந்தியா முழுவதும் பெரிய அளவு வரவேற்பு இருக்கிறது.
அந்த வகையில் சமீபத்தில் வந்த சாஹோ படம் விமர்சன ரீதியாக தோல்வியை தழுவினாலும் வசூல் ரீதியாக இரட்டை வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் பிரபாஸ் அடுத்ததாக எந்த படத்தில் நடிக்கப்போகிறார் என அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த நிலையில் முழுக்க முழுக்க ஒரு காதல் திரைப்படத்தில் நடிக்க உள்ளாராம்.
ராதே ஷ்யாம் என்ற பெயர் வைக்கப்பட்டுள்ள இந்த படம் 5 மொழிகளில் வெளியாக உள்ளது. மேலும் இந்த படத்திற்கு ஏ ஆர் ரகுமான் தான் இசையமைப்பாளராக வேண்டும் என்று முதலில் பிரபாஸ் விரும்பினாராம்.
இது சம்பந்தமாக ஏ ஆர் ரஹ்மானிடம் பேச்சுவார்த்தை நடத்திய பிறகு ரகுமானின் சம்பளம் படக்குழுவினருக்கு திருப்தி அளிப்பதாக தெரியவில்லை. சுமார் 350 கோடி பட்ஜெட்டில் உருவாகும் காதல் படத்திற்கு 4 கோடி சம்பளம் பேசி உள்ளார் ரகுமான்.
ஆனால் பிரபாஸ் மற்றும் படக்குழுவினருக்கு இவ்வளவு கொடுக்க விருப்பம் இல்லையாம். ஆனால் இந்த படத்தில் பிரபாஸின் சம்பளம் மட்டுமே 70 கோடி. பிரபாஸ் 70 கோடி வாங்கியது பெரிய விஷயமாக தெரியவில்லையாம்.
ஆனால் ஏ ஆர் ரகுமான் 4 கோடி கேட்டது தவறாம். இப்படிப்பட்ட படக்குழுவினருடன் வேலை செய்ய வேண்டிய அவசியமில்லை என ஏ ஆர் ரகுமான் கருதி அந்த படத்தை புறக்கணித்தால் நல்லது.
