பாகுபலி’ படத்தில் நடிக்கும் போது பிரபாஸுக்கும், அனுஷ்காவுக்கும் காதல் ஏற்பட்டதாக கிசுகிசுக்கப்பட்டது. இதனை உறுதிப்படுத்தும் விதமாக இருவரும் அதை மறுக்கவில்லை.

மேலும், இவர்கள் இருவரும் காதலிப்பதாக வதந்தி கிளப்பிவிட்டதற்காக அனுஷ்கா தனது உதவியாளர் ஒருவரை வேலையில் இருந்து நீக்கியதாக தகவல் வெளியானது. இப்போது, அனுஷ்காவுக்கு நெருக்கமானவர்களே பிரபாசை அவர் காதலிக்கிறார் என்று கிளப்பி விடுவதாகவும் இதனால் அனுஷ்கா கோபத்தில் இருப்பதாகவும் விவரம் அறிந்தவர்கள் கூறினர்.

இந்நிலையில் ‘பாகுபலி-2’ படத்தை அடுத்து பிரபாஸ் நடிக்கும் ‘சாஹோ’ தெலுங்கு படத்திலும் அனுஷ்காவே அவருக்கு ஜோடியாகி நடிக்கிறார். இதற்கு இயக்குனரிடம் சிபாரிசு செய்ததே பிரபாஸ் தான் என்று தெலுங்கு பட வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.

இதனால் பிரபாஸ்-அனுஷ்கா காதல் உறுதியாகிவிட்டது என்று மீண்டும் பேச்சு எழுந்து இருக்கிறது. இதனால் டென்ஷன் ஆன அனுஷ்கா இதுகுறித்து விளக்கம் அளித்துள்ளார்.

“நானும் பிரபாசும் படத்தில் பொருத்தமான ஜோடி தான். ஆனால் உண்மையில் நல்ல நண்பர்கள்” என்று தெரிவித்துள்ளார். ஆனால், சினிமா வட்டாரத்திலோ நல்ல நண்பர்கள் என்றாலும் காதலர்கள் என்று தான் அர்த்தம் என்று பேசப்படுகிறது.