வெள்ளிக்கிழமை, டிசம்பர் 13, 2024

பிரபாஸுக்கு முன் அந்த ஹேண்ட்சம் நடிகரெல்லாம் ஒன்னுமே இல்ல.. ராஜமெளலி சர்ச்சை பேச்சு

பிரபாஸுக்கு முன்பு ஹிருத்திக் ரோசன் எல்லாம் ஒன்றுமே இல்லை என்று பெசியது பற்றி ராஜமெளலி விளக்கம் அளித்திருக்கிறார்.

இந்திய சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் எஸ்.எஸ். ராஜெமெளலி. அவர் இயக்கிய மகதீரா, நான் ஈ, பாகுபலி ஆகிய படங்களை அடுத்து, ஜூனியர் என்.டி.ஆர். ராம்சரண் கூட்டணியில் அவர் இயக்கிய ஆர்.ஆர்.ஆர் படம் 2022 ஆம் ஆண்டு வெளியாகி ரூ.1000 கோடி வசூலித்தது. எனவே இந்திய சினிமாவில் ரூ.1000 கோடி வசூலித்த முதல் இயக்குனர் என சாதனை படைத்த ராஜமெளலி தற்போது மகேஷ்பாபுவை வைத்து புதிய படத்தை இயக்கி வருகிறார். எனவே இந்தியாவின் முன்னணி நடிகர்கள் ராஜெமெளலியின் இயக்கத்தில் நடிக்க காத்துக் கொண்டிருக்கின்றனர்.

பிரபாஸ் பட நிகழ்ச்சியில் பேசிய ராஜமெளலி

இந்த நிலையில், கடந்த 2009 ஆம் ஆண்டு பிரபாஸ் நடிப்பில் வெளியான பில்லா படம் புரமோசனில் ராஜமெளலி, அல்லு அர்ஜூன் பங்கேற்றனர். அப்போது பேசிய ராஜமெளலி,’’ 2006 -ல் தூம் 2 வெளியானபோது, ஹிருத்திக் ரோசன் போன்ற ஹீரோக்கள் தென்னிந்தியாவில் ஏன் இல்லை என்று வியந்துபோனேன். ஆனால், பில்லாவின் டிரெயிலர் பார்த்து, பிரபாஸுடன் ஒப்பிடும்போது ஹிருத்திக் ரோசன் ஒன்றுமே இல்லை. பாலிவுட்டைவிட தெலுங்கு சினிமா நன்றாக இருப்பதா’’க கூறினார்.

அப்போது, இந்தி சினிமாத்துறையினரும், ஹேண்ட்சம் நடிகரான ஹிருத்திக் ரோசன் ரசிகர்களும் ராஜெமெளலியின் கருத்துக்கு கடுமையான விமர்சனம் தெரிவித்தனர்.

சர்ச்சை பேச்சுக்கு விளக்கம்

இதுகுறித்து தற்போது கருத்து தெரிவித்துள்ளார். அதில், ’’ரொம்ப வருசத்துக்கு முன்னாள் பேசியது அது. சுமார் 15-16 ஆண்டுகள் இருக்கும் என நினைக்கிறேன். நான் அப்படி பேசியிருக்க கூடாது. அதை நான் ஒப்புக் கொள்கிறேன். நான் அப்படிப்பேசியதன் நோக்கம் ஒருவரை தாழ்த்துவது கிடையாது. ஹிருத்திக் ரோசனை நான் மதிக்கிறேன்’’ என்று தெரிவித்துள்ளார்.

ராஜெமெளலி தனது படத்தில், தமிழ், தெலுங்கு, இந்தி நடிகர்களை நடிக்க வைத்து பான் இந்தியா படமாக எடுத்து வரும் நிலையில், அன்றைய காலகட்டத்தில் பேசியது போது அவரே பாகுபலி மாதிரி பிரமாண்ட படத்தை எடுத்து, பாலிவுட்டுக்கு சவால் விடுக்க கூடிய வகையில் படமெடுப்பதை நினைத்திருக்க மாட்டார்.

ஆனால் காலம் அவருக்கு கைகூடி பாலிவுட்டை மிரளவிட்டார். தற்போது அவரது படங்கள் அனைத்திற்கும் பான் இந்தியா ரீச் உள்ளதால் அடுத்து வெளியாகும் அவரது படங்களுக்கு பிரச்சனை வரக்கூடாது, வசூல் பாதிக்கக் கூடாது என்பதற்காகத்தான் முன்பு பேசியதற்கு விளக்கம் அளித்தாரா? என சினிமா ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

- Advertisement -

Trending News