fbpx
Connect with us

Cinemapettai

பிரபாஸின் 500 கோடி பட்ஜெட் படத்தில் அவருக்கு தம்பியாக நடிக்கும் இளம் தமிழ் நடிகர்.. யார் அந்த அதிர்ஷ்டசாலி?

Tamil Cinema News | சினிமா செய்திகள்

பிரபாஸின் 500 கோடி பட்ஜெட் படத்தில் அவருக்கு தம்பியாக நடிக்கும் இளம் தமிழ் நடிகர்.. யார் அந்த அதிர்ஷ்டசாலி?

இந்திய சினிமாவில் மிகப்பெரிய பட்ஜெட்டில் நடிக்கும் நடிகர்களில் ஒருவர் பிரபாஸ். பாகுபலி படங்களுக்கு பிறகு அவரது கேரியர் வேற லெவலுக்கு சென்றுவிட்டது.

அடுத்ததாக பிரபாஸ் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் ஆதி-புருஷ். ராமாயணத்தை அடிப்படையாக கொண்டு உருவாகும் இந்த படத்தை ஓம்நாத் இயக்க உள்ளார்.

இந்த படம் முழுக்க முழுக்க 3டியில் உருவாகி இருப்பது மேலும் சிறப்பு. இந்திய சினிமாவில் முதன் முதலில் 3டி தொழில்நுட்பத்தில் முழு படத்தையும் உருவாக்கியவர் ஷங்கர்தான்(2.o) என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஆதி புருஷ் படத்தில் பிரபாஸ் ராமனாக நடிக்க உள்ளார். இந்நிலையில் அவருக்கு தம்பியாக லட்சுமணன் கதாபாத்திரத்தில் நடிக்க பல நடிகர்கள் பேசப்பட்டு வந்த நிலையில் இறுதியாக பிரபல தமிழ் நடிகர் இணைந்துள்ளார்.

அவர் வேறு யாருமல்ல. நம்ம அதர்வா தான். ஏற்கனவே சில தெலுங்கு படங்களில் குறிப்பிட்ட கதாபாத்திரத்தில் நடித்துள்ள அதர்வாவுக்கு இந்த படம் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தி தரும் என தெரிகிறது.

இந்த செய்தி தற்போது தமிழ் சினிமாவில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. தமிழிலும் பிரபல நடிகராக பல வெற்றி படங்களை கொடுத்தவர் அதர்வா என்பதையும் மறந்துவிடக் கூடாது.

Continue Reading
To Top