பிரபாஸின் 400 கோடி பட்ஜெட் பட்ஜெட் படத்திற்கு இசையமைப்பாளர் இவரா.? ஏ ஆர் ரஹ்மானையே ஓரம் கட்டியவர்

தெலுங்கு சினிமா மட்டுமின்றி இந்திய சினிமாவே வியந்து பார்க்கும் அளவுக்கு பாகுபலி படங்களால் உயர்ந்து நிற்பவர் பிரபாஸ்.

படத்துக்கு படம் பிரபாஸின் மார்க்கெட் உலகளவில் பெரிய வசூலை வாரி குவித்து வருகிறது.

அந்தவகையில் அடுத்ததாக பிரபாஸ் மற்றும் பூஜா ஹெக்டே நடிக்கும் ராதே ஷியாம் என்ற படம் கிட்டத்தட்ட 400 கோடி பட்ஜெட்டில் உருவாக உள்ளது.

முழுக்க முழுக்க காதல் கதையாக உருவாகும் இந்த படத்தில் முதலில் இசையமைக்க ஏ ஆர் ரஹ்மானிடம் பேசப்பட்டதாம்.

ஆனால் சம்பள விஷயத்தில் பிரபாஸ் மற்றும் ஏ ஆர் ரகுமான் ஆகிய இருவருக்கும் உடன்பாடு ஏற்படாத நிலையில் தற்போது மிகச் சிறிய மற்றும் பெரிய அளவில் அறிமுகம் இல்லாத இசையமைப்பாளரை தேர்வு செய்துள்ளார்கள்.

அவர் வேறு யாரும் இல்லை. ஜஸ்டின் பிரபாகரன் என்பவர் தான். இவர் சமீபத்தில் சில தெலுங்கு படங்களுக்கு இசை அமைத்து அதை பார்த்த ராதே ஷியாம் படக்குழுவினர் அவரை தேர்வு செய்துவிட்டார்கள்.

மிகப்பெரிய பட்ஜெட் படத்திற்கு இவ்வளவு சிறிய இசையமைப்பாளரா என அனைவரும் ஆச்சரியத்தில் இருக்கின்றனர்.

prabhas-cinemapettai
prabhas-cinemapettai