fbpx
Connect with us

நொறுங்கிப் போன அனிதாவின் கணவர்.. பிக் பாஸ் கண்ணு குட்டிகாக போட்ட ஆறுதல் பதிவு!

anitha-sampath-3

Tamil Cinema News | சினிமா செய்திகள்

நொறுங்கிப் போன அனிதாவின் கணவர்.. பிக் பாஸ் கண்ணு குட்டிகாக போட்ட ஆறுதல் பதிவு!

விஜய் டிவியில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிக் கொண்டிருக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியின் நான்காவது சீசன், மற்ற சீசன்களை விட அதிக விறுவிறுப்புடன் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது.

மேலும் கடந்த சில நாட்களுக்கு முன்பு அனிதா சம்பத், பிக் பாஸ் வீட்டில் தான் தனிமையாக உணர்வதாக கூறி கன்பஷன் ரூமில் கதறி கதறி அழுது இருந்தார். இந்த நிலையில் தற்போது அவருக்கு ஆறுதல் கொடுக்கும் வகையில் அவருடைய கணவர் ‘கவலை வேண்டாம் செல்லம்மா’ என தனது சமூக வலைதளப்பக்கத்தில் ஆறுதல் தெரிவித்துள்ளார்.

அதாவது சமீபத்தில் பிக்பாஸ் வீட்டில் நகரவாசி, கிராமவாசி என்ற டாஸ்க் நடைபெற்றபோது, சுரேஷுக்கும் அனிதாவிற்கும் பயங்கரமான சண்டை மூண்டது.

இதையடுத்து பிக்பாஸ் வீட்டின் கன்பஷன் ரூமில் கதறி அழுத அனிதா, தான் தனிமையாக உணர்வதாகவும், தன் மீது தவறுகள் உள்ளதாக நினைப்பதாகவும் பிக்பாஸிடம் தெரிவித்தார்.

இந்நிலையில் இதுபற்றி அனிதா சம்பத்தின் கணவர் பிரபாகரன் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அனிதாவிற்கு ஆறுதலளிக்கும் வகையில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்.

மேலும் அதில், ‘இது எல்லாம் சரியாகிவிடும்.. கவலை வேண்டாம் செல்லம்மா!’ என்று குறிப்பிட்டிருக்கிறார்.

எனவே, இதைப் பார்த்த நெட்டிசன்கள் பலர், ‘நீங்க என்னதான்  மாஞ்சு மாஞ்சு ஆறுதல் சொன்னாலும், அத அனிதாவால இப்போ பாக்க முடியாதே’  என்று தங்களது கருத்துக்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

anitha-sampath

anitha-sampath

Continue Reading
To Top