கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்தின் மூலம் பிரபலமான பவர்ஸ்டார் லத்திகா படத்தின் மூலமாக அறிமுக நாயகனானார். தற்போது காமெடி வேடங்களில் நடிக்கும் பவர்ஸ்டார் லத்திகா-2 படத்தை தானே தயாரித்து ஹீரோவாக நடிக்க முடிவு செய்துள்ளாராம்.

இந்நிலையில் தற்போது மிர்ச்சி சிவா நடிப்பில் திரை வண்ணன் அட்ரா மச்சான் விசிலு படத்தில் சூப்பர் ஸ்டாராக நடித்துள்ளார். ஆனால் இப்படத்தில் தனக்கு ஜோடி இல்லை என்று வருத்தப்படும் பவர்ஸ்டார் தனக்கு எந்த படத்திலும் ஜோடி போடுவது இல்லை என்று கூறி வருந்தினார்.

இதனால் தான் தயாரிக்கும் லத்திகா-2 வில் தனக்கு ஜோடியாக இரண்டு கதாநாயகியை புக் பண்ண போகிறாராம்.