Connect with us
Cinemapettai

Cinemapettai

power-star-cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

பால் பழத்துடன் ஃபர்ஸ்ட் நைட் ரூமில் பவர் ஸ்டார்.. சைடுல சொம்பு நசுங்கிருக்கு பாஸ்.. வைரலாகும் போஸ்டர்!

லத்திகா என்ற காவிய படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானவர் டாக்டர் பவர் ஸ்டார் ஸ்ரீனிவாசன். இவர் நடிக்க வந்ததற்கு டாக்டர் தொழிலிலையே ஒழுக்கமாக பார்த்திருக்கலாம் என பல்வேறு விதமான கருத்துக்கள் வெளிவந்தன.

ஹீரோவாகத்தான் நடிப்பேன் என அனைவரையும் கொன்று கொண்டிருந்த பவர் ஸ்டாரை சந்தானம் காமெடி நடிகராக திசை திருப்பிவிட்டார். அதில் அவருக்கு செம வரவேற்பு இருந்தது.

அது மட்டுமில்லாமல் ஒரு கட்டத்தில் முன்னணி காமெடி நடிகனாக மாறுவதற்கான அனைத்து வாய்ப்புகளும் இருந்த நிலையில் பண மோசடி வழக்கில் சிறைக்குச் சென்றார். தியாகியாக சென்ற பவர் ஸ்டார் தாறுமாறு ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மூலம் வெளி வந்துள்ளார்.

நீண்ட நாட்களாக படங்களில் நடிக்காமல் இருந்த பவர் ஸ்டார் தற்போது மீண்டும் ஒரு படத்தில் கதாநாயகனாக நடிக்க உள்ளார். அந்த படத்திற்கு முருங்கைக்காய் என பெயரிடப்பட்டுள்ளது.

முருங்கைக்காய் சமாச்சாரத்தை தற்போது இவரும் கையில் எடுத்துள்ளார். பவர் ஸ்டாரின் இந்த பர்ஸ்ட் லுக் போஸ்டர் அனைவரையும் கவர்ந்துள்ளது. ஆர்எஸ் மணி என்பவர் இந்த படத்தை இயக்க உள்ளார்.

மீண்டும் சினிமாவில் ஒரு நல்ல முறையில் வலம்வர பவர் ஸ்டாருக்கு வாழ்த்துக்கள். இதோ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்:

murungaikai-first-look

murungaikai-first-look

Continue Reading
To Top