fbpx
Connect with us

பவர் ஸ்டார் சீனிவாசனை காணவில்லை என போலீசில் புகார் அளித்த மனைவி.

powerstar srinivasan arrest

News | செய்திகள்

பவர் ஸ்டார் சீனிவாசனை காணவில்லை என போலீசில் புகார் அளித்த மனைவி.

பவர் ஸ்டார் சீனிவாசனை காணவில்லை

பவர் ஸ்டார் சீனிவாசன் காணவில்லை என்று அவரது மனைவி ஜூலி புகார் தெரிவித்துள்ளார். நீதானா அவன், லத்திகா போன்ற படங்களில் கதாநாயகனாக நடித்து காமெடி பண்ணியவர் பவர் ஸ்டார் சீனிவாசன். அவரை சந்தானம் கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்தின் சரியாக பயன்படுத்தி வெற்றி பெறச் செய்தார்.

அதன்பின் ஒரு சில படங்களில் மட்டுமே பவர் ஸ்டார் சீனிவாசன் நடித்தார். பின்பு சினிமாவில் நடிப்பதை குறைத்துக் கொண்டார். இப்படிப்பட்ட சூழ்நிலையில் அவருக்கு ஏற்கனவே நிதி மோசடி சொத்து பிரச்சினை என பல பிரச்சனைகள் இருந்தது அதனால் சற்று மன உளைச்சலில் இருந்தார்.

தனது டாக்டர் வேலையை சரியாக செய்யாமல் அப்படியே விட்டுவிட்டு சினிமாவில் கவனம் செலுத்தி இப்பொழுது அதையும் அப்படியே கிடப்பில் போட்டு தன் பிரச்சினைகளை சரி செய்வதற்கு முயற்சி செய்து கொண்டிருந்தார்.அவரின் பிரச்சினைகள் தலைக்குமேல் சென்றதால் அவரால் ஈடுகொடுக்க முடியாமல் சோர்ந்து கிடந்தார்.

இதனால் தலைமறைவான சீனிவாசன், இப்பொழுது எங்கே இருக்கிறார் என்ன செய்கிறார் என்று யாருக்கும் தெரியவில்லை. அவர் மனைவி ஜூலி சென்னை அண்ணாநகர் காவல் நிலையத்தில் கணவனைக் காணவில்லை என்று புகார் தெரிவித்துள்ளார். சொத்து பிரச்சினையில் உறவினர்களும் அவரை தீவிரமாக தேடி வருகின்றனர்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top