தமிழ்த் திரையுலகில் தற்போது வெளியாகும் படங்கள் பத்து நாளைத் தாண்டுமா என தயாரிப்பாளர்களும், இயக்குனர்களும், நடிகர், நடிகைகளும் பதட்டத்துடன்தான் இருக்கிறார்கள். ‘பைரசி’ சினிமாவை ஒரு புறம் கெடுத்துக் கொண்டிருக்க, மறுபுறம் தியேட்டர் டிக்கெட்டுகள், பார்க்கிங், ஸ்நாக்ஸ், ஆகியவற்றின் கட்டுப்பாடில்லாத விலைகள் மக்களை தியேட்டர்களுக்கு வருவதை தடுத்துக் கொண்டிருக்கின்றன.

அதிகம் படித்தவை:  எனது தங்கைகள் வஞ்சகமான பாடத்திட்டத்தால் தோற்கடிக்கப்பட்டனர் - ஜி.வி

ஒவ்வொரு வாரமும் ‘பாகுபலி 2’ போன்ற படங்கள் வர வாய்ப்பில்லை. விடுமுறை காலமாக இருக்கவேதான் இந்தப் படத்திற்கும் இவ்வளவு கூட்டம் வருகிறது. இல்லையென்றால் இப்படி ஒரு வசூல் படத்திற்கு கிடைக்க வாய்ப்பில்லை என அனுபவஸ்தர்கள் சொல்கிறார்கள்.

 

இப்படிப்பட்ட இக்கட்டான சூழல் தமிழ்த் திரையுலகில் நிலவும் சூழ்நிலையில் ஒரு நாளில் வெளிவந்த 3 படங்கள் 25 நாட்களைக் கடந்து ஓடிக் கொண்டிருப்பது ஆச்சரியமாக உள்ளது. ஏப்ரல் 14ம் தேதி வெளியான ‘ப பாண்டி, கடம்பன், சிவலிங்கா’ ஆகிய படங்கள் நேற்றுடன் 25வது நாளைக் கடந்துள்ளன.