Connect with us
Cinemapettai

Cinemapettai

முனீஸ்காந்த் நடிப்பில் ‘போஸ்ட் மேன்’ வெப் சீரீஸ்.. சஸ்பென்ஸில் மிரள வைக்கும் தொடர்

postman-zee5

Tamil Cinema News | சினிமா செய்திகள்

முனீஸ்காந்த் நடிப்பில் ‘போஸ்ட் மேன்’ வெப் சீரீஸ்.. சஸ்பென்ஸில் மிரள வைக்கும் தொடர்

போஸ்ட்மேன்: முனிஷ்காந்த் மற்றும் கீர்த்தி பாண்டியன் நடித்த Tamil Web series நேற்று Zee5 இணையத்தில் வெளிவந்தது. இந்த தொடரை பிரசாந்த் குணசேகரன் டைரக்ட் செய்துள்ளார் மற்றும் சமீர் பரத் ராம் தயாரித்துள்ளனர். இந்த வலைத் தொடரில் விஜய் மற்றும் விக்கி இசையமைத்துள்ளனர். இந்த தொடரில் முனீஸ்காந்த் ராஜா என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவர் ஒரு தபால்காரர் மற்றும் ரஜினிகாந்தின் மிகப்பெரிய ரசிகர், அவரது மகளுடன் மகிழ்ச்சியான வாழ்க்கையை நடத்துவது போல் தொடர் அமைந்துள்ளது.

போஸ்ட்மேன் அற்புதமான டிரெய்லரை காண இங்கே கிளிக் செய்க 

ஒருநாள், அலுவக நேரத்தில் ஒன்பது தபால்களை டெலிவரி செய்யும் நேரத்தில், வேலை செய்யாமல் ரஜினி படத்திற்கு சென்றுவிடுவார். பின்பு படம் முடிந்து திரும்பும் நேரத்தில் ஒரு விபத்தை சந்தித்து கோமா நிலைக்குச் செல்கிறார்.

postman

23 ஆண்டுகளுக்குப் பிறகு அவர் எழுந்ததும் இந்த கடிதங்களை வழங்க முயற்சிக்கும்போது என்ன ஆகும்? இந்தத் தொடரை ஜூன் 27, 2019 அன்று ZEE5ல் வெளிவந்துள்ளது. இந்த வெப் சீரியஸில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கும் முனிஸ்காந்த் கடந்த 10 வருடங்களாக தமிழ் சினிமாவில் முக்கியமான பல கதாபாத்திரங்களில் நடித்து வெற்றி கண்டவர்.

இவர் நடித்த ராட்சசன் படம் தமிழ் சினிமா வரலாற்றில் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இவர் தமிழ் சினிமாவில் 45 படங்களில் நடித்துள்ளார். இவரது நடிப்பில் வெளியாகி இவருக்கு நல்ல பெயரை பெற்றுக் கொடுத்த படங்கள் முண்டாசுப்பட்டி, ஜிகிர்தண்டா, டார்லிங் 2, மாநகரம், கடைசியாக வெளியான ராட்சசன். இப்படத்தில் சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தாலும் இப்படத்தின் வெற்றிக்கு அந்த கதாபாத்திரம் முக்கியமானதாக இருந்தது.

இதில் நடித்திருக்கும் முனீஸ்காந்த் மகளாக நடித்திருப்பவர் பிரபல நடிகர், தயாரிப்பாளர் அருண் பாண்டியனின்  மகள் கீர்த்தி பாண்டி. இவர் முதன் முதலாக நடித்து தும்பா என்ற திரைப்படம் வெளி வந்துள்ளது. இந்த படத்தில் பல மிருகங்கள் நடித்துள்ளனர் ஆகையால் சிறுவர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று ஓடிக்கொண்டிருக்கும்.

இந்த படத்தின் பிரஸ்மீட்டின் போது கீர்த்தி பாண்டி தன் உடல் மெல்லிசாக இருப்பதாக பல இயக்குனர்கள் வாய்ப்பு தரவில்லை. என் திறமையை பார்க்காமல் என் குறையை பார்த்து  வாய்ப்புகள் தரவில்லை என்று கூறி அழுதார். ஆனால் இந்த சீரியலில் வரும் அவரின் தோற்றம் மற்றும் வசன உச்சரிப்புகளை பார்க்கும்போது நல்ல திறமையான நடிகை என்பது வெளிப்படையாகத் தெரிகிறது.

இந்த வெப் சீரியலை பார்க்கும்போது தந்தைக்கும் மகளுக்கும் நடக்கும் 23 வருட போராட்டத்தை சுற்றி கதை அமைக்கப்பட்டுள்ளது. இந்த போராட்டத்திற்கு பின் தபால் துறையில் வேலை பார்த்த தன்  தந்தையுடன் சேர்ந்து டெலிவரி செய்ய வேண்டிய 9 தபால்களை அதன் உரியவர்களிடம் கொண்டு போய் சேர்ப்பதுதான் கதை.

டீசரிலேயே இயக்குனர் மிக  துள்ளியமாக கையாண்டுள்ளார். வசனங்கள் மற்றும் ஒளிப்பதிவு  மிகச் சிறப்பாக வந்துள்ளது. Zee5-ல் மட்டும் ஒளிபரப்பாகும் இந்த வெப் சீரியல் ரசிகர்களிடையே பிரம்மாண்ட வரவேற்பு  பெரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Zee5, தற்போது பல முன்னணி நிறுவனங்களுடன் போட்டி போட்டு பெரும் ரசிகர் பட்டாளத்தை சேர்த்துக் கொண்டு வருகிறது.  இதில் வரும் அனைத்து சீரியல், ரியாலிட்டி ஷோ, திரைப்படங்கள் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

திரைப்படத்திற்கு மாறாக தற்போது திரை உலகமே திரும்பி பார்க்கும் அளவிற்கு பல வெப் சீரியல்களை வெளியிட்டு வருகின்றனர். வெளிவந்துள்ள வெப் சீரியல்களுடன் போட்டி போடுவதற்காக தற்போது களமிறக்கப்பட்டுள்ள வெப் சீரியல் தான் போஸ்ட்மேன்.

இப்போது இந்த கதைப்படி நீங்களே முனீஸ்காந்த் கதாபாத்திரமாக இருந்தால் எப்படி இருக்கும் என்பது போன்று கதையை சொல்கிறோம்.

1995ல் நடக்கும் கதை என்பதை கற்பனை செய்து கொள்ளுங்கள், நீங்கள் ஒரு தபால்காரர், கடிதங்களை வழங்க நியமிக்கப்பட்டவர். வேலைக்கு செல்லாமல் நீங்கள் பாட்ஷா படம் பார்க்க ஒரு தியேட்டருக்கு செல்கிறீர்கள்! (வெளிப்படையாக, இதன் பொருள் நீங்கள் ஒரு ஹார்ட்கோர் ரஜினி ரசிகர்!).

வீடு திரும்பும் போது, ​​நீங்கள் ஒரு விபத்தை சந்திக்கிறீர்கள். உங்கள் தலையில் அடிபட்டு 20 ஆண்டுகளுக்கும் மேலாக கோமாவில் விழுகிறீர்கள்! பின்னர் நீங்கள் ஒரு நாள் விழித்தவுடன், உலகம் மாறிவிட்டது, மீண்டும் கடிதங்களை வழங்க முடிவு செய்கிறீர்கள். இதுதான் கதை மிகவும் நேர்த்தியாக கையாண்டுள்ளார் இயக்குனர்.

கடிதங்களை டெலிவரி செய்யும்போது ஏற்படும் மர்மம் மற்றும் சஸ்பென்ஸ் மிகவும் விறுவிறுப்பாக செல்கிறது.

ஊடகங்களுடன் பேசிய சமீர் பரத், “இருபது ஆண்டுகளுக்கும் மேலாக கோமாவிலிருந்து எழுந்தபின் ஒரு மனிதனின் வாழ்க்கைக்கு என்ன நேரிடும் என்ற எண்ணம் எங்களுக்கு கதையை படமாக்க ஊக்கமளித்தது.” மேலும் நாங்கள் தபால்காரரின் பாத்திரத்தை சித்தரிக்க பல முக்கிய நடிகர்களை அணுகினோம். வலைத் தொடர்கள் வருவதால் படங்களில் பணிபுரியும் வாய்ப்பை குறைக்கும் என்று பலர் அஞ்சுவதாக நான் நினைக்கிறேன், ஆனால் அது அப்படி இல்லை. வலைத் தொடர்கள்தான் எதிர்காலம் என்று கூறினார்.

முனிஷ்காந் பற்றி கூறுகையில் “அவர் தன் சிறந்த நடிப்பை வழங்கியுள்ளார், மேலும் அவரது நடிப்பை பார்த்து பல பிரபலமான நடிகர்கள் வலைப் பிரிவில் நுழைய தூண்டும் என்று நம்புகிறேன்’ என்று கூறினார்.

முனிஷ்காந்த் தனது அனுபவத்தைப் பற்றி கூறியது. “இந்த தொடரில் பணிபுரிந்த எங்கள் அணி தங்களால் சிறந்ததைக் கொடுக்க மிகவும் கடினமாக உழைத்தனர்,” என்று அவர் கூறினார். மேலும் கதை மிகவும் அருமையாக இருந்தது, இந்த வாய்ப்புக்காக கீர்த்தி பாண்டியன் மற்றும் குழுவினருக்கு நன்றி தெரிவித்தார்.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top