fbpx
Connect with us

தலைவா கடனாளி ஆகாம என்ன காப்பாத்திட்டீங்க! கட்சியில் இருந்து நீக்கப்பட்டதை போஸ்டர் ஒட்டி கொண்டாடிய மதிமுக நிர்வாகி!

vaikoo

Politics | அரசியல்

தலைவா கடனாளி ஆகாம என்ன காப்பாத்திட்டீங்க! கட்சியில் இருந்து நீக்கப்பட்டதை போஸ்டர் ஒட்டி கொண்டாடிய மதிமுக நிர்வாகி!

தலைவா கடனாளி ஆகாம என்ன காப்பாத்துங்க உங்களுக்கு நன்றி என்று வைகோவுக்கு நன்றி சொல்லி மதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட நிர்வாகி ஒருவர் போஸ்டர் அடித்து தான் நீக்கப்பட்டதை கொண்டாடியுள்ளார்.

ராமநாதபுரம் மாவட்ட மதிமுக இளைஞரணி அமைப்பாளர் அரு.சுப்ரமணியன்  தான் வைகோவுக்கு நன்றி தெரிவித்து போஸ்டர் அடித்து கொண்டாடி இருக்கிறார். ஈழத்தமிழர்களுக்கான பிரச்சனை மற்றும் தமிழர் தொடர்பான பிரச்சனைகளில் மதிமுக பொதுச் செயலாளரின் அதிரடி நடவடிக்கைகளால் ஆசையாக மதிமுகவில் சேர்ந்தவர்தான் ராமநாதபுரத்தைச் சேர்ந்த அரு.சுப்ரமணியன்.

பெரும் செல்வந்தரான அரு.சுப்ரமணியன் விவசாய நிலங்கள், கடைகள் என செல்வாக்குடன் வாழ்ந்து வருகிறார். கட்சியில் இவரது செயல்பாடுகளை பார்த்த வைகோ அவருக்கு ராமநாதபுரம் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் பதவி வழங்கியிருக்கிறார்.

இந்நிலையில், கடந்த நாடாளமன்ற தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிட்ட இந்திய யூனியன் முஸ்லீம் கட்சி வேட்பாளர் நவாஸ்கனிக்கு ஆதரவாக சுப்பிரமணியன் செயல்படவில்லை, அமமுக வேட்பாளருக்கு ஆதரவாக செயல்படுகிறார் என சுப்பிரமணியன் மீது புகார் எழுந்தது.

இதையடுத்து வைகோவின் உதவியாளர் அருணகிரி, சுப்பிரமணியனிடம் இது குறித்து விசாரணை நடத்தி இருக்கிறார். அப்போது இருவருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் முற்றியதாம்.

இதையடுத்து மதிமுகவில் இருந்து அரு.சுப்பிரமணியன் நீக்கப்படுவதாக அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதையடுத்து அரு.சுப்பிரமணியன் செய்த விஷயந்தான் தமிழ்நாட்டையே பரபரப்புக்கு உள்ளாக்கியுள்ளது.

கட்சியில் இருந்து நீக்கப்பட்ட இதற்காக நன்றி தெரிவித்து போஸ்டர் அடித்து ஒட்டியுள்ளார். அதில், கடனாளி ஆக்காமல் கட்சியை விட்டு என்னை நீக்கியதற்கு வைகோவுக்கு நன்றி என சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

poster-prabaharan

poster-prabaharan

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top