Connect with us

Cinemapettai

post

India | இந்தியா

எந்த பேங்கல கணக்கு இருந்தாலும் போஸ்ட் ஆபிஸில் பணம் எடுக்கலாம்

நீங்கள் எந்த வங்கியில் கணக்கு வைத்திருந்தாலும் இனிமேல் தபால் நிலையங்களில் பணம் எடுக்கலாம். இதற்காக புதிய  வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

கடந்த மாதம் வரை தபால் வங்கிக்கணக்கு வைத்திருப்பவர்கள் மட்டுமே தபால் வங்கி சேவையை பெறும் நிலை இருந்து வந்தது. ஆனால் தற்போது இந்த சேவையை மத்திய அரசு விரிவாக்கம் செய்துள்ளது.

அதாவது எந்த வங்கியின் வாடிக்கையாளராக இருந்தாலும் அவரது வங்கிக்கணக்கு ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்டு இருந்தால் அவர் இனிமேல் தபால் வங்கிகளில் அதாவது தபால் நிலையங்களில் பண பரிவர்த்தனைகளை மேற் கொள்ள முடியும். இந்த புதிய வசதி கடந்த 1-ந்தேதி அமல்படுத்தப்பட்டு உள்ளது.

மத்திய சட்டம் மற்றும் தகவல் தொடர்புத்துறை மந்திரி ரவிசங்கர்பிரசாத் அதிகாரப்பூர்வமாக திட்டம் குறித்து அறிவித்துள்ளார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

அதிகம் படித்தவை

Advertisement
To Top