Rajini : ரஜினி எப்போதுமே மேடையில் ஏறும்போது என்னை வாழ வைத்தது தமிழ்நாடு என்று சொல்லிக்கொண்டே இருப்பார். கர்நாடகாவில் பஸ் கண்டக்டர் ஆக இருந்த அவர் பாலச்சந்தரின் கண்ணில் பட்டு சினிமாவில் நுழைந்தார். அதன்பின் அவரது ஸ்டைல் ரசிகர்களுக்கு பிடித்து போய்விட்டது.
மேலும் தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் என ரஜினி கொண்டாடப்பட்டார். 70 வயதை கடந்தும் இப்போதும் கதாநாயகனாக நடித்து வருகிறார் ரஜினி. இப்போது வேட்டையன் மற்றும் கூலி படங்கள் ரஜினியின் கைவசம் இருக்கிறது. இதில் வேட்டையன் படம் வருகின்ற ஆயுத பூஜைக்கு திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.
இந்த சூழலில் நடிகர் சங்க கட்டிடத்திற்கு ரஜினி எந்த உதவியும் செய்யாததை பற்றி வலைப்பேச்சு அந்தணன் ஆதங்கத்தை வெளிப்படுத்தி இருக்கிறார். ஏற்கனவே இவர்கள் ரஜினியை பற்றி பேசி பல பிரச்சனைகளை சந்தித்திருந்தனர். அடுத்த சூப்பர் ஸ்டார் விஜய் என்று சொன்னதால் அவர்களது ஆஃபீஸ் ஆகியவற்றை ரஜினி ரசிகர்கள் அடித்து நொறுக்கினர்.
நடிகர் சங்க கட்டிடத்திற்கு உதவாத ரஜினி
இந்நிலையில் நடிகர் சங்கம் கட்டிடத்திற்கு கமல், விஜய், சூர்யா, உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் ஒரு கோடி ரூபாய் நன்கொடை கொடுத்துள்ளனர். சிவகார்த்திகேயன் தன்னால் முடிந்த அளவுக்கு 50 லட்சத்தை கொடுத்திருந்தார். ஆனால் தமிழ்நாடு ரஜினியை வாழ வைத்த நிலையில் அவர் ஐந்து கோடி கூட கொடுத்திருக்கலாம்.
சிவகார்த்திகேயன் போன்ற பெரிய நட்சத்திரங்களே ரஜினியுடன் ஒரு புகைப்படம் எடுக்க வேண்டும் என்ற ஆசையில் இருக்கின்றனர். இப்படிப்பட்ட அந்தஸ்துக்கு காரணமாக இருந்த தமிழ் சினிமாவிற்கு ரஜினி உதவாதது வருத்தம் அளிப்பதாக அந்தணன் கூறியுள்ளார்.
மேலும் நடிகர் சங்க கட்டிடத்திற்கு அள்ளிக் கொடுக்காமல் கிள்ளி கொடுத்திருந்தாலும் மனதாரி இருக்கும். ஆனால் ரஜினி ஒரு படத்திற்கு 200 கோடி சம்பளம் வாங்கி வரும் நிலையில் நடிகர் சங்கம் கட்டிடத்திற்கு உதவாதது பலருக்கும் அதிர்ச்சி அளிக்கும் விதமாக உள்ளது.
ரஜினியை தாக்கி பேசிய பிரபலம்
- லைக்காவும், ரஜினியும் கண்டு கொள்ளாத பரிதாபம்
- ரஜினிகாந்த் அடுத்த பட அறிவிப்பு! சூப்பர் ஸ்டாருடன் களமிறங்கும் சிம்பு
- ரஜினிக்கு வந்த மிகப்பெரிய தலைவலி