fbpx
Connect with us

புட்ட பொம்மா பாடலையே மிஞ்சுற அளவுக்கு எனக்கு ஒரு பாட்டு குடுங்க.. தமனிடம் கேட்ட பிரபல நடிகர்

Tamil Cinema News | சினிமா செய்திகள்

புட்ட பொம்மா பாடலையே மிஞ்சுற அளவுக்கு எனக்கு ஒரு பாட்டு குடுங்க.. தமனிடம் கேட்ட பிரபல நடிகர்

உலகிலுள்ள அனைவராலும் தலையில் தூக்கி வைத்து கொண்டாடப்பட்ட பாடல் என்றால் அது புட்ட பொம்மா பாடல் தான்.

இந்த வருட துவக்கத்தில் தெலுங்கு சினிமாவில் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான அளவைகுந்தபுரம்லோ எனும் படத்தில் இடம் பெற்ற அந்த பாடல் உலகம் முழுவதும் சூப்பர் ஹிட் அடித்தது.

கிரிக்கெட் வீரர் வார்னர் முதல் இந்திய சினிமாவின் டாப் நடிகர்கள் வரை அனைவரும் அந்த பாட்டை வைத்து டிக் டாக் செய்து பிரபலமடைந்தன.

அந்த பாடல் தற்போது யூடியூபில் 400 மில்லியன் பார்வையாளர்களை கடந்து வெற்றி நடை போட்டுக் கொண்டிருக்கிறது.

butta-bomma-song

butta-bomma-song

இந்நிலையில் சிம்பு மற்றும் சுசீந்திரன் இணையும் அடுத்த படத்தின் இசையமைப்பாளர் யார் என்பதில் குழப்பங்கள் ஏற்பட்ட நிலையில் தற்போது அதற்கான விடை கிடைத்துள்ளது.

அவர் வேறு யாருமல்ல. சிம்புவின் நெருங்கிய நண்பர் தமன் தான். தமனிடம் சிம்பு புட்டபொம்மா பாடலை மிஞ்சும் அளவுக்கு ஒரு பாடல் வேண்டும் என கேட்டுள்ளாராம்.

Continue Reading
To Top