முதல் படத்திலேயே ஹிட் கொடுத்த இயக்குநரின் டைரக்ஷனில் நடித்து பெயர் பெற்ற நடிகரை ஆசை ஆசையாய் காதலித்து திருமணம் செய்து கொண்டவர் அந்த பிரபல தொலைக்காட்சி விஜே.
அந்த அம்மணிக்கும் அவரது வீட்டு வேலைக்கே நேரம் சரியாக இருந்தது. பெரிய ஹீரோவுக்கு மனைவியாகி விட்ட மகிழ்ச்சி இருந்தாலும் தற்போது விஜேக்கு சோகமும் சேர்ந்து கொண்டது.
மேலும் நடிகர் நடித்த படமும் இந்த சினிமாகாரர்களின் சூழ்ச்சியாலோ என்னவோ பெட்டிக்குள் முடங்கியது. வேறு வழியில்லாமல் தன்னுடைய பழைய வேலைக்கு கிளம்பிய அம்மணி, பழைய சேனலுக்கு தூதுவிட்டு உள்ளார். அவர்களும் மார்க்கெட் உள்ள விஜே என்பதால் புது நிகழ்சிகள் வர வாய்ப்பு இருக்கிறதாம்.
தற்போது பிரபலமாகி வரும் முன்னணி சேனல் ஒன்றில் விஜேவாக இருந்தாலும் பெரிய அளவு ரீச் கிடைக்கவில்லை. இதனால் பழையபடி சினிமா சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்க அம்மணி புது ஸ்கெட்ச் போட்டுள்ளார்.

இவர் ஒரு காலத்தில் கிரிக்கெட் வீரர் முரளி விஜய் உடன் கிசுகிசுக்கப்பட்டார். ஆனால் அதெல்லாம் துளியும் உண்மை இல்லையாம். தற்போது மீண்டும் இரண்டாவது இன்னிங்க்ஸ் ஆரம்பித்து உள்ளார். வெற்றி பெற வாழ்த்துக்கள்..