Tamil Cinema News | சினிமா செய்திகள்
தெறியா, வேதாளமா? குழப்பத்தில் பிரபல நடிகர்.. பில்டப் கொஞ்சம் ஓவரா இருக்கே பாஸ்
தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாக்கள் மாறிமாறி ரீமேக் செய்து கொள்வது ஒன்றும் புதிதல்ல. பல நடிகர்களுக்கு ரீமேக் படங்கள் சினிமா கேரியரில் மிக முக்கிய பங்கு வகித்துள்ளது என்றால் மிகையாகது.
குறிப்பிட்ட சில வருடங்களுக்கு முன்பு தல அஜித் மற்றும் தளபதி விஜய் ஆகிய இருவரும் ஏகப்பட்ட ரீமேக் படங்களில் நடித்து வந்தனர். அந்த படங்கள் இருவரின் சினிமா கேரியரிலும் மிக முக்கிய பங்கு வகித்துள்ளன. அந்த வகையில் தளபதி விஜய்க்கு கில்லி, போக்கிரி போன்ற படங்கள் தெலுங்கு ரீமேக் தான்.
அதைப்போல் தல அஜித்துக்கு அவள் வருவாளா, தொடரும், கிரீடம் போன்ற படங்கள் அமைந்தன. தெலுங்கு நடிகர்களும் தமிழில் ஹிட்டாகும் நிறைய படங்களை ரீமேக் செய்துள்ளனர். சமீபத்தில் கூட தனுஷ் நடிப்பில் வெளிவந்த அசுரன் படத்தை நடிகர் வெங்கடேஷ் நாரப்பா என்ற பெயரில் ரீமேக் செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் அரசியலில் இருந்து பின்வாங்கிய பவன் கல்யாண் திடீரென படங்களில் நடிக்க முடிவு செய்துள்ளார். தற்போது நேர்கொண்ட பார்வை படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடித்து வருகிறார். மேலும் தளபதி விஜய்யின் தெறி மற்றும் அஜித்தின் வேதாளம் ஆகிய இரண்டு படங்களில் ஏதேனும் ஒன்றை ரீமேக் செய்யலாம் என்ற ஐடியாவில் இருக்கிறாராம்.
இந்த இரண்டு படங்களுமே வசூல் ரீதியாக பெரிய வெற்றியைப் பெற்றது அனைவரும் அறிந்ததே.
