நடிகை வனிதா விஜயகுமார் மீது அவரது இரண்டாவது கணவர் குழந்தை கடத்தல் புகார் அளித்துள்ளார்.

பிரபல நடிகர் விஜயகுமாரின் மகள் வனிதா விஜயகுமார், தெலுங்கானா மாநிலம் ஹைதரபாத்தைச் சேர்ந்த ராஜன் என்ற ஆனந்தராஜனை 2009-ம் ஆண்டு 2வது திருமணம் செய்து கொண்டார்.

இவர்களுக்கு ஜெனிதா ராஜன் என்ற மகள் உள்ள நிலையில் இருவரும் 2011-ம் ஆண்டு விவாகரத்து செய்து கொண்டனர்.

வனிதாவின் சம்மதத்தின்பேரில் ஜெனிதாவை ஆனந்தராஜே வளர்த்து வந்த நிலையில் மகளை வனிதா கடத்திச் சென்றுவிட்டதாக, தெலங்கானா மாநிலம் சைதராபாத் பொலிசில் ஆனந்தராஜன் புகார் அளித்துள்ளார்.

இதன்பேரில் குழந்தை கடத்தல் உள்ளிட்ட 3 பிரிவுகளில் வனிதா மீது வழக்குப்பதிவு செய்த பொலிசார் அவரை தேடி வருகின்றனர்.