Tamil Cinema News | சினிமா செய்திகள்
சீன் போட்டதால் நிவின் பாலியின் சூப்பர் ஹிட் பட வாய்ப்பை இழந்த பிரபல தமிழ் நடிகர்.. பந்தா பார்ட்டியின் பரிதாப நிலை

2010 ஆம் ஆண்டு கலைஞர் டிவியில் நடத்திய ஒரே ஒரு உருப்படியான நிகழ்ச்சி என்றால் அது நாளைய இயக்குனர் நிகழ்ச்சி தான். இன்று சினிமாவில் பெரிய இயக்குனர்களாக வலம் வரும் கார்த்திக் சுப்புராஜ், நலன் குமாரசாமி போன்றோர் இங்கிருந்து வந்தவர்கள் தான்.
அதில் பிரேமம் படத்தை இயக்கிய அல்போன்ஸ் புத்திரனும் ஒருவர். பிரேமம் படம் தமிழ் சினிமாவில் மட்டும் 200 நாட்கள் ஓடி சாதனை படைத்தது. அதுமட்டுமில்லாமல் நிவின் பாலிக்கு தமிழ், தெலுங்கு, மலையாள சினிமாவில் அதிக ரசிகர்களை உருவாக்கியது இந்த படம்தான்.
முன்னர் இவர்களது கூட்டணியில் தமிழ், மலையாளம் என இரண்டு மொழியிலும் ஒரே நேரத்தில் வெளியான படம்தான் நேரம். இன்றைய இளைஞர்களுக்கும் அந்தப்படம் ஃபேவரிட் தான். நேரம் படம் இரண்டு மொழிகளிலும் சூப்பர் ஹிட் அடித்தது. நேரம் படத்தில் முதன் முதலில் நடிக்க இருந்தவர் ஜெய் தானாம்.
அல்போன்ஸ் புத்திரன் பல முறை போன் செய்தும் போனை எடுக்காமல் தவிர்த்தாராம். அதுமட்டுமில்லாமல் அவரை பலமுறை அலையவிட்டு வேடிக்கை பார்த்தாராம் ஜெய். இதனால் கடுப்பான அல்போன்ஸ் புத்திரன் தன்னுடன் குறும்படங்களில் வேலை செய்த நிவின் பாலியை ஹீரோவாகிவிட்டார்.
தற்போது தமிழ் மலையாளம் மொழிகளில் முன்னணி நடிகர்கள் ரேஞ்சுக்கு நடித்து வருபவர் தான் நிவின் பாலி என்பதை மறக்க முடியாது. மீண்டும் அல்போன்ஸ் புத்திரன் நிவின் பாலி கூட்டணியில் ஒரு படம் உருவாக உள்ளது எனவும் செய்திகள் கிடைத்துள்ளது.
இதில் சோகம் என்னவென்றால் எப்படியாவது எனக்கு ஒரு ஹிட் கொடு என மீண்டும் அல்போன்ஸ் புத்திரனிடம் கெஞ்சி வருகிறாராம் ஜெய். தமிழ் சினிமாவில் ஜெய் நடிக்கும் எந்த படமும் வெற்றியை பெறுவது இல்லை. மாறாக அஞ்சலியுடன் காதல் செய்து கொண்டிருக்கும் போதுதான் இந்த வேலையை செய்ததாகவும் கோலிவுட் வட்டாரங்களில் பேசி வருகின்றனர்.
