Tamil Cinema News | சினிமா செய்திகள்
பிரபல முன்னணி தமிழ் நடிகரின் பிரம்மாண்ட 25-ஆவது படம் OTT ரிலீஸ்.. கவலையில் ரசிகர்கள்
தியேட்டர்கள் இல்லாத நிலையில் நாளுக்கு நாள் OTT தளங்களின் வளர்ச்சி அதிகமாகி கொண்டே செல்கிறது.
போகிற போக்கை பார்த்தால் பெரிய பட்ஜெட் படங்களுக்கு தியேட்டர்களும், சிறிய பட்ஜெட் படங்களுக்கு OTT தளங்களும் எனப் பிரித்துக் கொள்வார்கள் போல.
ஏற்கனவே மிகப்பெரிய படமாக சூரரைப்போற்று OTT தளத்தில் வெளியாவதால் மற்ற முன்னணி நடிகர்களின் தயாரிப்பாளர்களும் அந்த யோசனையை செய்து வருகிறார்களாம்.
OTT தளங்களில் படங்களை ரிலீஸ் செய்வதால் பல மொழிகளிலும், பல்வேறு நாடுகளிலும் ஒரே சமயத்தில் மக்களை சென்றடைய முடியும் என்பதையும் கருத்தில் கொள்கின்றனர்.
அந்தவகையில் அடுத்ததாக தமிழ் சினிமாவின் வசூல் நடிகராக வலம் வரும் ஜெயம்ரவியின் 25வது படமான பூமி படம் நெட்ப்ளிக்ஸ் அல்லது அமேசான் தளத்தில் விரைவில் வெளியாகும் என தெரிகிறது.
ஏற்கனவே பூமி படத்தின் ட்ரைலர் மற்றும் தமிழன் என்று சொல்லடா என்ற பாடல் வெளியாகி வரவேற்பை பெற்ற நிலையில் இந்த படத்திற்கு எதிர்பார்ப்பு ஏற்பட்டது. ஆனால் ஜெயம் ரவியின் முடிவு ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
