Tamil Cinema News | சினிமா செய்திகள்
உங்களுக்கு மனசாட்சியே இல்லையா அஜித்.. பொது மேடையில் தலயை திட்டிய பிரபல தயாரிப்பாளர்
தல அஜித் தமிழ் சினிமாவில் தற்போது தன்னிகரற்ற நாயகனாக விளங்கி வருகிறார். ரசிகர்கள் கூட்டம் ஏராளம் கொண்டுள்ள ஒரு நடிகரை பிரபல தயாரிப்பாளர் ஒருவர் மேடையில் தாக்கி பேசியது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
அவர் வேறு யாரும் இல்லை. சமீபகாலமாக பெரிய நடிகர்களை தொடர்ந்து தாக்கி பேசி வரும் தயாரிப்பாளர் ராஜன் தான். புறநகர் படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்கு வருகை தந்திருந்த ராஜன், தல அஜித்தை லெப்ட் ரைட் வாங்கியுள்ளார்.
அவர் கூறியதாவது, நீங்கள் வாழ, சினிமாவில் உயர வழி செய்த தயாரிப்பாளர்களுக்கு நீங்கள் நன்றியை செலுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. தமிழ் சினிமாவில் நீங்கள் யார் என்றே தெரியாத போது உங்களை வைத்து படம் எடுக்க முன்வந்தவர் பொன்னுரங்கம். ஆனால் இன்று அவர் சோற்றுக்கே கஷ்டப்பட்டு கொண்டிருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
ஆனால் நீங்களும் அதைப்பற்றி எல்லாம் கவலைப்படாமல் சோற்றுக்கே வழியில்லாத போனி கபூருக்கு(கேலியாக) தொடர்ந்து இரண்டு படங்கள் செய்வது நியாயமா என கேட்டுள்ளார். மேலும் சில வருடங்களுக்கு முன்பு உங்களை வைத்து தயாரித்த தயாரிப்பாளர்களுக்கு தனியாக படம் பண்ணவில்லை என்றாலும் நான்கைந்து தயாரிப்பாளர்களுக்கு சேர்ந்து படம் பண்ண வேண்டும் எனவும் கூறியுள்ளார்.
இவர் கூறியது ஒரு வகையில் சரியாக இருந்தாலும் தல ரசிகர்கள் இவர் மீது அதிருப்தியில் உள்ளனர். காரணம் சமீபகாலமாக இவர் எங்கு சென்றாலும் தல அஜித் பெரிதாக்கி பேசுவதை வழக்கமாக வைத்துள்ளார் எனவும் கோலிவுட் வட்டாரங்கள் பேசுகின்றனர்.
