fbpx
Connect with us

Cinemapettai

ரஜினியை அசிங்கப்படுத்திய தயாரிப்பாளர் இவரா? கமல் படத்தின் போதுதான் இது நடந்ததாம்! தர்பார் சீக்ரெட்!

Tamil Cinema News | சினிமா செய்திகள்

ரஜினியை அசிங்கப்படுத்திய தயாரிப்பாளர் இவரா? கமல் படத்தின் போதுதான் இது நடந்ததாம்! தர்பார் சீக்ரெட்!

தர்பார் படத்தின் சூப்பர் ஹிட்டுக்கு பிறகு ரஜினிகாந்த் சிறுத்தை சிவா இயக்கத்தில் அண்ணாத்த படத்தில் நடித்து வருகிறார். டி இமான் இசையமைக்கும் இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.

தர்பார் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஒரு தயாரிப்பாளரால் அசிங்கப்பட்டதை மேடையில் கூறினார். ஆனால் அது யார் என்பதை கூற மறுத்துவிட்டார்.

தற்போது அதற்கான விடை தெரிய வந்துள்ளது. கமல்ஹாசன் நடிப்பில் உருவான சட்டம் என் கையில் படத்தில் தயாரிப்பாளர் டி என் பாலு என்பவரால் முதன் முதலில் ரஜினிகாந்த் அந்த படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டாராம்.

அட்வான்ஸ் தருகிறேன் என்று கூறி பின்னர் தராமல் அலைய விட்டுள்ளார். மேலும் ரஜினியிடம் தரக்குறைவாக பேசியதால் உடனடியாக அந்த இடத்தை விட்டு சில தூரம் நடந்து சென்றதாகவும் கூறி வருத்தப்பட்டார்.

பின்னர் அதே தயாரிப்பாளர் முன் ஃபாரின் காரில் வந்து இறங்கியதாகவும் தெரிவித்தார். அதன் பிறகுதான் சட்டம் என் கையில் படத்தில் ரஜினிகாந்த் கதாபாத்திரத்தில் சத்யராஜ் நடித்தார். ஆனால் இவ்வளவு நடந்தும் கமல் அதைப் பற்றி பேசாதது தான் ரஜினிக்கு மிகவும் வருத்தத்தை கொடுத்ததாம்.

எந்த தயாரிப்பாளர் தன்னை சினிமாவை விட்டு துரத்தி விடுவேன் என மிரட்டினாரோ அதே தயாரிப்பாளரின் முன் கிட்டத்தட்ட 40 ஆண்டுகாலமாக நம்பர் ஒன் இடத்தில் ரஜினிகாந்த் வலம் வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Continue Reading
To Top