Tamil Cinema News | சினிமா செய்திகள்
ஒரு கதை ரெடி பண்ணவே லட்சக்கணக்கில் செலவு செய்த அட்லீ.. அடித்துத் துரத்தாத குறையாகத் திட்டி விட்ட தயாரிப்பாளர்!
அட்லீ என்றால் கதை திருடர் என்பதெல்லாம் வேறு. அட்லீ என்றால் சங்கர் போல் பிரம்மாண்டம் என்பதுதான் தற்போதைய கோலிவுட் வட்டாரத்தில் பேச்சாக உள்ளது.
பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் அசிஸ்டெண்ட் ஆக இருந்ததால் இவரது படங்களும் ஷங்கர் படங்களை போல மிகவும் பிரமாண்ட பட்ஜெட்டில் உருவாகி அனைவருக்கும் அதிர்ச்சியை கொடுத்து வருகிறது.
அதுமட்டுமில்லாமல் அடுத்தவர்கள் காசில் ஆட்டையை போடுவது என்றால் அட்லீக்கு அவ்வளவு பிடிக்குமாம். இப்படித்தான் விஜய்யின் பட வாய்ப்பு கிடைத்தபோது ஒரு தயாரிப்பாளருக்கு கிட்டத்தட்ட 95 லட்சம் வெறும் கதை விவாதத்திற்கு மட்டுமே செலவு செய்ததை கண்டு செம டென்சனாகி விட்டாராம்.
அட்லீ விஜய் கூட்டணியில் முதன் முதலாக உருவாகிய திரைப்படம் தெறி. சூப்பர் ஹிட்டடித்த அந்த படத்தை தயாரித்தவர் கலைப்புலி எஸ் தாணு. முன்னதாக அந்த படம் வேறு ஒரு தயாரிப்பாளர் தயாரிப்பதாக இருந்ததாம்.
ஆனால் எப்படியோ அந்த படத்தை கைப்பற்றிய கலைப்புலி தாணுவிடம், அட்லீ ஏற்கனவே அவர்களிடம் செலவு செய்த பணத்தை திரும்ப செட்டில் பண்ணனும் என கேட்டுள்ளார்.
சரி, ஒரு 10 லட்சத்துக்குள் தான் இருக்கும் என நினைத்த தயாரிப்பாளருக்கு தலையில் குண்டை போடுவது போல 95 லட்சம் பில்லை எடுத்து கையில் கொடுத்துள்ளார். இதனால் கலைப்புலி எஸ் தாணுவுக்கு ஒரு நிமிஷம் தலை சுற்றிவிட்டது.
இவரை இப்படியே விட்டால் வேலைக்கு ஆகாது என தன்னுடைய கட்டுக்குள் கொண்டு வந்து விட்டாராம். தெறி படத்தின் போது கலைப்புலி தாணு அதிகமாக பட்ஜெட் விஷயத்தில் தலையிட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
