சினிமாவை பொறுத்தவரை தல அஜித்துக்கு நண்பர்கள் மிகக் குறைவு தான். ஆரம்ப காலகட்டத்தில் இருந்து தற்போது வரை அவர் சொற்ப ஆட்களுடன் மட்டுமே பழகி வந்துள்ளார். அதிலும் சிலர் ஆரம்பத்தில் நன்றாக பழகி விட்டு தற்போது அஜித்தை பற்றி தவறாக பேட்டி கொடுத்து வருகின்றனர்.
அஜித் சினிமா வாழ்க்கையைப் பற்றி சொல்லித் தெரியவேண்டியதில்லை. ஆரம்பத்தில் சுமாரான படங்களை கொடுத்தாலும் அவர்கள் ரசிகர்கள் கொடுத்த உத்வேகத்தில் தற்போது தொடர்ந்து பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து வருகிறார்.
தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் தல அஜித்தை வைத்து படம் தயாரிக்க பல தயாரிப்பாளர்கள் போட்டி போடுகின்றனர். இருந்தாலும் அஜித் தனக்கு வசதியான தயாரிப்பாளர்களுடன் மட்டுமே தொடர்ந்து படம் செய்து வருகிறார்.
சத்யஜோதி பிலிம்ஸ் மற்றும் போனி கபூர் ஆகிய இரண்டு தயாரிப்பாளர்களை மட்டுமே அஜித் முழுமையாக நம்பி வருகிறார். ஒரு காலத்தில் அஜித்துடன் மிக நெருக்கமான நண்பராக இருந்தவர் ரோஜா கம்பைன்ஸ் உரிமையாளர் ஞானவேல். காஜா மைதீன் மற்றும் ஞானவேல் இருவரும் சேர்ந்து ஒரு நிறுவனத்தை நடத்தி வந்துள்ளனர்.
அஜித்துக்கு மிக நெருக்கமான நண்பராக ஒரு காலத்தில் வலம் வந்த ஞானவேலுக்கு அஜித் தானாகவே வலியப்போய் ஒரு படம் செய்யலாம் என வாய்ப்பு கொடுத்தாராம். அஜித்தை வைத்து மிகப்பெரிய படம் எடுக்க வேண்டுமென நல்ல கதைக்காக காத்து கொண்டிருந்தாராம்.

ஆனால் அது தற்போது வரை நடக்கவில்லை எனவும், கிணற்று நீரை வெள்ளமா கொண்டு செல்லப் போகிறது எனவும் அசால்டாக விட்டுவிட்டதாக புலம்பித் தள்ளியுள்ளார். இப்போதும் இருவருக்குள்ளும் ஒரு நல்ல நட்புறவு இருப்பதால் பட வாய்ப்பு கொடுங்கள் எனக் கேட்டு அவரை தொந்தரவு செய்ய மாட்டேன் எனவும், அஜீத்தே கூப்பிட்டு கொடுத்தால் கண்டிப்பாக சிறந்த படத்தை எடுத்து தருவேன் எனவும் குறிப்பிட்டுள்ளார்.