தமிழ் சினிமாவில் டாப் நடிகர்களான ரஜினி மற்றும் கமலை தற்போது பிரபல அரசியல் தலைவர் கடுமையாக விமர்சித்துள்ளார். “சினிமாவில் மட்டும் தான் வீரமாக நடிக்கிறார்கள்” என சுப்ரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.

ஒரு தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியிருப்பதாவது “கமல் முட்டாள் தனமாக பேசுவார். அகங்காரம் கொண்ட முட்டாள் அவர். சினிமா நடிகர்கள் யாருக்கும் தைரியம் கிடையாது. அவங்க வாழ்க்கையே அப்படிதான். வீரமா இருப்பது போல காட்டுவது டிராமா. பொது வாழ்க்கையில் அவர்கள் பயந்தான்கோலிகள். ரஜினியும் அப்படி தான்.”

“ஒரு அழைப்பை ஏற்றுக்கொள்ளும் முன் யோசிக்க வேண்டாமா? யோசித்து முடிவெடுக்க வேண்டாமா? சினிமாவில் மட்டும் தான் வீரன், சிலர் எதிர்ப்பு தெரிவித்ததும் பயந்துவிட்டார். அதை மறைக்க சில சினிமா வசனங்களை அறிக்கையாக வெளியிட்டுள்ளார்” என சுப்ரமணியன் சுவாமி தெரிவித்துளளார்.