Tamil Cinema News | சினிமா செய்திகள்
நான்காவது முறையாக பிரபல இசையமைப்பாளருடன் கூட்டணி போடும் கார்த்தி.. மிரட்டப் போகும் புதிய படம்
சமீபகாலமாக கார்த்திக் நடிக்கும் படங்களுக்கு தமிழ் சினிமா மட்டுமின்றி தென்னிந்திய சினிமாவில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.
அதிலும் தெலுங்கு பக்கம் கார்த்தியை அக்மார்க் தெலுங்கு நடிகராகவே பார்க்கத் தொடங்கிவிட்டனர். அதன் விளைவாக கார்த்தி சுமாரான படங்கள் நடித்தாலும் தெலுங்கில் செமயாக கல்லா கட்டி வருகிறது.
இந்நிலையில் கார்த்தி நடிப்பில் அடுத்தடுத்து சுல்தான் மற்றும் பொன்னியின் செல்வன் போன்ற படங்கள் போட்டி போட்டுக்கொண்டு ரிலீசுக்கு தயாராகிக் கொண்டிருக்கின்றன.
இதற்கிடையில் இரும்புத்திரை இயக்குனர் பிஎஸ் மித்ரன் இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் நடிக்க உள்ளார் கார்த்தி. பிஎஸ் மித்ரன் சமீபத்தில் சிவகார்த்திகேயனை வைத்து ஹீரோ என்ற தோல்வி படத்தை கொடுத்து இருந்தார்.

karthi-cinemapettai-01
பிஎஸ் மித்ரன் இதுவரை எடுத்த இரண்டு படங்களுக்கும் யுவன் சங்கர் ராஜா தான் இசையமைத்திருந்தார். ஆனால் இந்த முறை புதிய கூட்டணியில் புதிய படம் ஒன்று உருவாக உள்ளது.
ஆயிரத்தில் ஒருவன், சகுனி, கொம்பன் போன்ற படங்களுக்கு பிறகு நான்காவது முறையாக ஜிவி பிரகாஷ் கார்த்தி படத்திற்கு இசையமைக்க உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
