Connect with us

Cinemapettai

தெரியாமல் ஒரு படம் எடுத்துட்டு.. சுனாமி அளவு சிக்கலில் சிக்கிய யுவன்

yuvan

Tamil Cinema News | சினிமா செய்திகள்

தெரியாமல் ஒரு படம் எடுத்துட்டு.. சுனாமி அளவு சிக்கலில் சிக்கிய யுவன்

தமிழ் சினிமா மட்டுமின்றி சினிமா உலகத்தைப் பொறுத்தவரை பேராசையால் பல கோடி கடனில் தவித்தவர்கள் நிறைய பேர் உண்டு. சிறிய நிறுவனங்கள் மட்டுமின்றி பெரிய தயாரிப்பாளர்கள் கூட இந்த சூழ்நிலையில் இருந்துள்ளனர். இதனால் தற்போது பட தயாரிப்பை அவர்கள் விட்டுவிட்டார்கள்.

இருந்தும் சிலர் பணத்திற்கு ஆசைப்பட்டு கடன் வாங்கி படம் எடுத்து திரும்ப கட்ட முடியாமல் திணறி வருகின்றனர். இதனால் கடன் கொடுத்தவர்கள் படத்தை ரிலீஸ் செய்ய விடாமல் தடுத்து வருகின்றனர். ஏன் இதில் முன்னணி நடிகர்கள் படம் கூட இன்னும் ரிலீஸ் ஆகாமல் இழுத்துக் கொண்டிருக்கிறது அனைவரும் அறிந்ததே.

அந்த வகையில் பிரபல இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா பியார் பிரேமா காதல் என்ற படத்தின் மூலம் தயாரிப்பாளராக அறிமுகமானார். அந்த படம் சுமாரான வெற்றியைப் பெற்றது. ஆனால் அதன்பிறகு விஜய் சேதுபதி மற்றும் சீனு ராமசாமி வெற்றிக் கூட்டணியில் மாமனிதர் என்ற படத்தை தயாரித்து இருந்தார்.

இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா மற்றும் இளையராஜா ஆகிய இருவரும் இணைந்து இசையமைத்துள்ளனர். இதனால் பெரிய எதிர்பார்ப்பில் இருந்த இந்த படத்தை எப்படியாவது விற்று லாபம் பார்த்து விடலாம் என நினைத்த யுவனுக்கு கடன்காரர்கள் கிடுக்குபிடி போட்டு உள்ளனர்.

படத்தயாரிப்பில் 30 கோடிக்கும் மேல் கடன் வாங்கியதாகவும், படத்தின் இயக்குனர் சீனு ராமசாமிக்கு சம்பளம் கொடுக்கவில்லை எனவும் செய்திகள் வெளிவந்துள்ளன. இதனால் சீனு ராமசாமி தயாரிப்பாளர் சங்கத்தை அணுகியதாகவும், பிறகு யுவன் விரைவில் சம்பளத்தை கொடுத்து விடுவதாகவும் கூறியதால் தற்போது சமாதானம் ஆகி உள்ளனர்.

நமக்கு எதுக்கு சார் தயாரிப்பு? மியூசிக் நல்லாதான வருது..

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top