Connect with us
Cinemapettai

Cinemapettai

valimai-ajith

Tamil Cinema News | சினிமா செய்திகள்

தல அஜித்துடன் இணைந்த மலையாள பிரபலம்.. களைகட்டும் வலிமை!

தல அஜித் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் வலிமை. நீண்ட நாட்களாக படப்பிடிப்பு நடத்தும் இப்படத்தின் 60 சதவீத படப்பிடிப்புகள் மட்டுமே முடிவடைந்துள்ளன.

இதற்கு தல அஜித்துக்கு இடையில் அடிபட்டது கூட ஒரு காரணம் எனவும் கூறப்படுகிறது. இருந்தாலும் தல எப்ப வந்தாலும் மாஸ் தான். ஆனால் ரசிகர்கள் தான் பாவம்.

நேர்கொண்ட பார்வை படத்திற்கு பிறகு தல அஜித் வலிமை படத்தில் நடிக்கிறார் என்பது மட்டுமே ரசிகர்களுக்கு கொண்டாட்டமான செய்தியாக அமைந்தது. ஆனால் வலிமை படத்தின் எந்த ஒரு அப்டேட்டும் தற்போது வரை வெளிவிட படவில்லை.

பாலிவுட் நடிகை ஹூமா குரேஷி மற்றும் தெலுங்கு நடிகர் கார்த்திகேயா ஆகியோர் தல அஜீத்தின் வலிமை படத்தில் நடித்து வருகின்றனர். இதை படக்குழுவினர் தெரிவிக்கவில்லை என்றாலும் சமீபத்தில் தெலுங்கு சேனலுக்கு பேட்டி கொடுக்கையில் கார்த்திகேயா இதை குறிப்பிட்டு இருந்தார்.

அதேபோல் தற்போது வலிமை படத்தில் மலையாள பிரபலம் ஒருவர் இணைந்துள்ளார். மலையாளத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் பேர்லே மானி(Pearle maaney).

இவர் தற்போது தல அஜித்தின் வலிமை படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமாக உள்ளார். பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் புகழ் பெற்ற இவர் பல மலையாளப் படங்களில் நடித்துள்ளார்.

அதுமட்டுமில்லாமல் பிரபல டிவி ஷோக்களில் பங்கு பெற்றுள்ளார். இவர் சமீபத்தில் ஒரு டிவி சேனலுக்கு பேட்டி கொடுக்கும்போது தல அஜித்துடன் நடிப்பதை உறுதி செய்தார். ரசிகர்கள் இந்த அப்டேட் எல்லாம் பத்தாது, எங்களுக்கு வலிமை பஸ்ட் லுக் வேண்டும் என அடம் பிடித்து வருகின்றனர்.

கொஞ்சம் கருணை காட்டுங்க போனி கபூர் சார்!

Continue Reading
To Top