தமிழ் திரையுலகில் மாஸ் நடிகராக கொடி கட்டி பறப்பவர் அந்த தளபதி விஜய். அவரின் நடிப்பில் வெளியாக இருக்கும் அந்த படத்திற்காக தற்போது ஒட்டுமொத்த திரையுலகமே ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறது. ஏனென்றால் நடிகரின் ஒவ்வொரு படமும் வசூலை வாரிக் குவிக்கும் என்பதுதான்.
இந்நிலையில் நடிகர் புதிதாக நடிக்க இருக்கும் படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க தற்போது இரண்டு நடிகைகள் மல்லுக்கட்டி வருகின்றனர். நடிகருடன் ஒரு படத்திலாவது ஜோடி சேர்ந்து நடித்து விட வேண்டும் என்று பல நடிகைகளும் கனவு கண்டு கொண்டிருக்க, ஏற்கனவே அவருடன் ஜோடி போட்டு நடித்த இந்த இரு நடிகைகள்தான் தற்போது மிகவும் ஆர்வமாக இருக்கிறார்களாம்.
அதிலும் நடிகரின் இரண்டு படங்களில் அவருக்கு ஜோடியாக நடித்த அந்த வாரிசு நடிகை இந்த முறையும் வாய்ப்பை பிடிக்க மும்முரமாக இருந்துள்ளார். அவருக்குப் போட்டியாக விவாகரத்து நடிகையும் களத்தில் குதித்தார். இந்நிலையில் வாரிசு நடிகைக்கு வாய்ப்பு கைநழுவி போனதில் அவர் ரொம்பவும் அப்செட்டில் இருக்கிறாராம்.
அதனால்தான் அவர் தற்போது அந்த அரசியல் வாரிசு நடிகரின் படத்தில் நடிப்பதற்கு ஓகே சொன்னாராம். தற்போது இந்த வாய்ப்பு விவாகரத்து நடிகைக்கு செல்ல இருக்கிறதாம்.
முதலில் நடிகைக்கு ஒரு பாடலை மட்டும் தான் கொடுப்பதற்கு முடிவு செய்யப்பட்டதாம். ஆனால் தற்போது நிலைமை மாறிவிட்டது. நடிகை நடிகருக்கு ஜோடியாக நடிக்கும் சூழல் தற்போது ஏற்பட்டுள்ளதாம்.
இதுதான் வாரிசு நடிகையை ரொம்பவும் கவலையில் ஆழ்த்தி விட்டதாம். அதோடு நடிகருடன் ஜோடி சேர ஆசை என்று மேடையில் கூறிய அந்த பிரபல நடிகைக்கும் இந்த வாய்ப்பு கிடைக்கலாம் என்கிறது சினிமா வட்டாரம்.