fbpx
Connect with us

Cinemapettai

6 வருடங்களுக்கு பிறகு மீண்டும் தமிழ் சினிமாவுக்கு வரும் வசந்தபாலன் பட நடிகர்.. எக்கச்சக்க எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!

Tamil Cinema News | சினிமா செய்திகள்

6 வருடங்களுக்கு பிறகு மீண்டும் தமிழ் சினிமாவுக்கு வரும் வசந்தபாலன் பட நடிகர்.. எக்கச்சக்க எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!

தமிழ் சினிமாவில் பிரபலமான மலையாள நடிகர் மீண்டும் ஆறு வருடங்கள் கழித்து தமிழ் சினிமாவில் நடிக்க ஆர்வம் காட்டுவது தமிழ் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

கேரள சினிமாவில் தற்போதைய முன்னணி நடிகராக வலம் வருபவர் பிரித்விராஜ் சுகுமாரன். வருட தொடக்கத்தில் அவரது நடிப்பில் வெளிவந்த அய்யப்பனும் கோஷியும் படம் பட்டையை கிளப்பியது.

வெறும் 6 கோடி செலவில் எடுக்கப்பட்ட படம் கிட்டத்தட்ட 50 கோடிக்கும் மேல் வசூல் சாதனையை செய்து அனைவரையும் மிரள வைத்தது. அடுத்ததாக பிரித்திவிராஜ் நடிப்பில் ஆடுஜீவிதம் எனும் படம் உருவாகி வருகிறது.

இந்நிலையில் 2014 ஆம் ஆண்டு வசந்தபாலன் இயக்கத்தில் வெளிவந்த காவியத்தலைவன் படம் தான் பிரித்திவிராஜ் தமிழில் கடைசியாக நடித்த படம்.

கிட்டத்தட்ட ஆறு வருடங்கள் ஆன நிலையில் மீண்டும் ஒரு ரொமான்டிக் காமெடி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் வருவதற்காக பல கதைகளை கேட்டுக் கொண்டிருக்கிறாராம்.

விரைவில் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவரும் என தெரிகிறது. மலையாள ரசிகர்கள் மட்டுமில்லாமல் தமிழ் சினிமாவிலும் பிரித்விராஜின் படங்களுக்கு ஒரு எதிர்பார்ப்பு இருப்பது குறிப்பிடத்தக்கது.

Continue Reading
To Top