திங்கட்கிழமை, டிசம்பர் 9, 2024

டிமான்ட்டி அருள்நிதிக்கு இப்படி ஒரு நிலைமையா.? ஓடிடி-யில் கூட இல்ல, நேரடியாக TV-யில் வெளிவரும் படம்

இயக்குனர் முத்தையா இயக்கத்தில் பிரபல ஹீரோவை வைத்து புதிய படத்தை இயக்கவிருக்கிறார். இப்படம் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. குட்டிப்புலி, கொம்பன், மருது ஆகிய படங்களை இயக்கியவர் முத்தையா. இவர் கிராமத்து படங்களை ஆக்சன் கலந்து எடுப்பதில் திறமைவாய்ந்தவராக கருதப்படுகிறார்.

இவர் இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் கடைசியாக வெளியான படம் காதர் பாட்சா எனும் முத்துராமலிங்கம். இப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்ற நிலையில், இவர் அடுத்து ஒரு படம் இயக்குவ தற்கு அவர் முன்னர் இயக்கிய அதே நடிகர்களை அணுகியதாகவும் அவரது கடைசிப் படம் சரியாகப் போகவில்லை என்பதால் புதிய படத்தில் நடிக்க கால்ஷீட் கொடுக்கவில்லை என தகவல் வெளியானது.

ஹீரோ முடிவை தள்ளிவைத்து, புதிய படம் இயக்கும் முத்தையா

இதனால், முத்தையா தானே ஹீரோவாக அடுத்த படத்தில் நடிக்கப் போகிறார். அடுத்து, அவரது மகனை ஹீரோவாக்கி ஒரு படத்தை தயாரித்து இயக்கப் போகிறார் என பல தகவல்கள் வெளியாகின.

இந்த நிலையில் இப்போதைக்கு ஹீரோவாகும் முடிவை ஒத்தி வைத்திருக்கும் முத்தையா, அருள்நிதி நடிப்பில் புதிய படத்தை இயக்கி வருகிறார். இதற்கான பேச்சுவார்த்தை சில மாதங்களாக நடந்து வந்த நிலையில், ஷூட்டிங்கும் தொடங்கி நடந்து வருகிறது.

இப்படத்தில் அருள்நிதிக்கு ஜோடியாக ரம்யா பாண்டியன் நடிக்கிறார். வரும் பொங்கல் பண்டிகைக்கு இப்படத்தை தொலைக்காட்சியில் நேரடியாக ஒளிபரப்பு செய்ய படக்குழு திட்டமிட்டிருப்பதால், தியேட்டரில் இப்படம் வெளியாகாது என கூறப்படுகிறது. இப்படமும் கிராமத்தில் நடைபெறும் கதையாக உருவாகி வருவதாக சொல்லப்படுகிறது.

- Advertisement -

Trending News