Tamil Cinema News | சினிமா செய்திகள்
தரமான கில்மா நடிகையை களமிறக்கும் பிக்பாஸ் விஜய் டிவி.. அதிகரிக்கும் எதிர்பார்ப்பு!
ஊரடங்கு சமயத்தில் டிஆர்பி ரேட்டிங்கில் மிகவும் பின் தங்கியிருந்த விஜய் டிவி தற்போது கொஞ்சம் கொஞ்சமாக டிஆர்பி-யில் முன்னேறிக் கொண்டு வருகிறது.
விட்டதை பிடிக்க வேண்டும் என மீண்டும் பழையபடி பிக் பாஸ் நிகழ்ச்சியில் அடுத்த சீசன் தொடங்கி விட்டார்கள். இதற்கான புரோமோ வீடியோவில் கமல் புதிய கெட்டப்புகளில் வந்து அசத்திக் கொண்டிருக்கிறார்.
இது ஒருபுறமிருக்க பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் கலந்துகொள்ள போவது யார் என்ற கேள்வியை அனைத்து தரப்பு மக்களிடமும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சீசனுக்கு சீசன் சண்டைகாரர்களை களமிறக்கி அவர்களுக்குள் சண்டை மூட்டி விட்டு டிஆர்பி-யில் செம கல்லா கட்டிக்கொண்டிருந்த விஜய் டிவி இந்த முறை முழுக்க முழுக்க கவர்ச்சியை மட்டுமே நம்பி உருவாக்கப்படுகிறது.
அந்த வகையில் ஏற்கனவே பல நடிகைகளின் பெயர்கள் பரிசீலனை செய்து வந்த நிலையில் தற்போது இறுதியாக 36 வயதான சஞ்சனா சிங் என்ற கவர்ச்சி நடிகையை களமிறக்கியுள்ளது விஜய் டிவி.
சினிமாவில் பெரும்பாலும் அந்த மாதிரி காட்சிகளிலேயே நடித்துள்ள இந்த நாயகி ரசிகர்களிடம் அவ்வளவு பரிச்சயமில்லை.
இருந்தாலும் சமீப காலமாக தனது இன்ஸ்டாகிராம் பக்கங்களில் அளவுக்கு மீறிய கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

sanjana-singh
