Tamil Cinema News | சினிமா செய்திகள்
சூர்யா தலை முடிக்கு ஆப்ரேஷன் இங்கு தான் செய்கிறார்.. ஆதாரத்துடன் கூறும் முக்கிய பிரபலம்
தமிழ் சினிமாவில் உள்ள முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் சூர்யா. வாரிசு நடிகராக இருந்தாலும் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி உள்ளார்.
சமீபத்தில் சூர்யா நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த சூரரைப்போற்று படத்தை இந்திய சினிமாவில் பாராட்டாதவர்களே கிடையாது.
பலருக்கு சந்தோஷத்தை கொடுத்திருக்கும் சூரரைப்போற்று படம் சிலருக்கு பொறாமையையும் அளித்துள்ளது.
அந்த வகையில் பாலிவுட் பிரபலம் ஒருவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் சூர்யா ஒட்டு முடி வைத்து நடிப்பதாக கூறி உள்ளார்.
மேலும் சூர்யா, துபாயில் உள்ள பிரத்யேக மருத்துவமனை ஒன்றில் தலைமுடிக்கு ஆபரேஷன் செய்து கொண்டதாக தெரிவித்துள்ளார்.
அதுவும் ட்விட்டரில் அதிகாரபூர்வ பக்கத்தில் இந்த செய்தியை குறிப்பிட்டுள்ளதால் சூர்யா ரசிகர்கள் செம டென்ஷன் ஆகி விட்டனர். அந்த பிரபலத்தை சமூக வலைத்தளங்களில் கேவலமாக திட்டி வருகின்றனர்.

suriya-hair-news
