சிவகார்த்திகேயன், சூரி ஆக நடிக்க இருந்த இருவர்.. நல்லவேளை நடிக்கல என பெருமூச்சு விடும் ரசிகர்கள்

சிவகார்த்திகேயனின் சினிமா கேரியரை முன்னணி நடிகர் ரேஞ்சுக்கு உய்ர்த்திய திரைப்படங்களில் வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்திற்கு மிகப்பெரிய பங்கு உண்டு. இந்த படத்தின் வெற்றியும் வசூலும் தான் அவரை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்றது என்று சொன்னால் மிகையாகாது.

சிவகார்த்திகேயன் டிவியில் இருந்து சினிமாவுக்கு வந்து தற்போது நட்சத்திர நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார். சமீபகாலமாக இவர் முன்னணி நடிகர்களுடன் போட்டி போட்டு வருகிறார் என்கிறார்கள் கோலிவுட் வாசிகள்.

அந்த அளவுக்கு சிவகார்த்திகேயனின் படங்களுக்கு செம வரவேற்பு இளைஞர்கள் மத்தியில் இருப்பதாக கருத்துக் கணிப்புகள் கூறுகின்றன. சிவகார்த்திகேயன் நடிப்பில் அடுத்ததாக டாக்டர் மற்றும் டான் போன்ற படங்கள் அடுத்தடுத்து வெளியாக உள்ளன.

சிவகார்த்திகேயனின் வெற்றிப்பட வரிசையில் வருத்தப்படாத வாலிபர் சங்கம் படம் முக்கிய இடத்தை பிடிக்கும். பொன்ராம் இயக்கியிருந்த அந்த படத்தில் சூரி மற்றும் சிவகார்த்திகேயன் கூட்டணியில் காமெடி காட்சிகள் அனைத்துமே படுபயங்கரமாக இருந்தது.

மேலும் சத்யராஜ், மொட்டை ராஜேந்திரன் என படத்தில் வந்த ஒவ்வொரு கதாபாத்திரங்களும் ரசிக்கும்படி அமைந்ததால் மாபெரும் வெற்றி பெற்ற பெரிய வசூலையும் வாரி குவித்தது. ஆனால் வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் முதன் முதலில் நடிக்க சூரி மற்றும் சிவகார்த்திகேயன் இல்லை எனக் கூறுகின்றனர்.

முதலில் வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் நடிக்க இருந்தது நடிகர் ஜீவா மற்றும் சந்தனம் ஆகிய இருவரும்தானாம். சிவா மனசுல சக்தி போன்ற படங்களிலிருந்து இவர்களது கூட்டணி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வந்தது. இருந்தாலும் வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்திற்கு சிவகார்த்திகேயன் மற்றும் சூரி ஆகிய இருவரைத் தவிர வேறு யாரும் சரியாக இருக்க மாட்டார்கள் என்று ரசிகர்கள் கூறுகின்றனர். சிவா மற்றும் சந்தானம் நடித்திருந்தால் வருத்தப்படாத வாலிபர் சங்கம் படம் வெற்றி பெற்றிருக்குமா? இல்லையா? என்பதை ரசிகர்கள் கமெண்டில் தெரிவிக்கலாம்.

jeeva-santhanam-cinemapettai
jeeva-santhanam-cinemapettai
Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்