Tamil Cinema News | சினிமா செய்திகள்
தல அஜீத்துக்காக 10 வருடமாக கதை எழுதி காத்திருக்கும் பிரபல இயக்குனர்.. ஓகே சொன்ன அடுத்த நாளே ஷூட்டிங் தானாம்!
தல அஜித் நடித்த பில்லா படத்தின் இரண்டாம் பாகம் தவிர மற்றொரு சூப்பர் ஹிட் படத்தின் இரண்டாம் பாகத்துக்கான கதையை எழுதி வைத்துக் கொண்டு நீண்ட நாட்களாக காத்திருக்கிறார் ஒரு இயக்குனர்.
தமிழ் சினிமாவில் அதிக மார்க்கெட் உள்ள நடிகர் தல அஜித். கடைசியாக அஜித் நடிப்பில் வெளியான விஸ்வாசம் மற்றும் நேர்கொண்ட பார்வை ஆகிய இரண்டு படங்களுமே 100 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை செய்தது.
அதனை தொடர்ந்து தற்போது வலிமை படத்தில் நடித்து வருகிறார். வலிமை இப்படத்தின் படப்பிடிப்புகள் ஆரம்பிக்கப்பட்டு கிட்டத்தட்ட ஒரு வருடங்கள் கடந்த நிலையில் இன்னமும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் கூட வெளியிடாமல் ரசிகர்களை சோதித்து வருகின்றனர்.
இந்நிலையில் தல அஜித் தமிழ் சினிமாவில் ரீஎன்ட்ரீ கொடுத்த மங்காத்தா படத்தின் இரண்டாம் பாகம் உருவாக அதிக வாய்ப்பு இருக்கிறது என்கிறது கோலிவுட் வட்டாரம்.
இதற்கான கதையை ஏற்கனவே வெங்கட்பிரபு உறுதி செய்துவிட்ட நிலையில் தல அஜித் எப்போது ஓகே சொன்னாலும் அடுத்த நாளே ஷூட்டிங் செல்ல ரெடியாக இருப்பதாக தனது நண்பர் சுப்பு பஞ்சு இடம் கூறியுள்ளார்.
தல ரசிகர்களும் மங்காத்தா படத்தின் இரண்டாம் பாகத்திற்காக வெறித்தனமாக வெயிட் செய்துகொண்டு இருக்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த படம் மட்டும் வெளியானால் தல அஜித்தின் சினிமா கேரியரில் வசூலில் சரித்திர சாதனை படைக்கும் என்கிறது கோலிவுட் வட்டாரம்.
