Connect with us
Cinemapettai

Cinemapettai

suriya-movie-release

Tamil Cinema News | சினிமா செய்திகள்

நல்லா கொட்டிக்கோ, நீ அதுக்குத்தான் லாய்க்கு.. சூர்யாவை கண்டபடி திட்டிய பிரபல இயக்குனர்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் சூர்யா. சமீபத்தில் சூர்யா நடிப்பில் வெளியான சூரரைப்போற்று திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளது.

அதனைத் தொடர்ந்து தற்போது கௌதம் மேனன் இயக்கத்தில் ஒரு வெப்சீரிஸ் ஒன்றில் நடித்துக் கொண்டிருக்கிறார் சூர்யா.

சூரரைப் போற்று படத்தில் சூர்யாவின் நடிப்பை பார்த்துவிட்டு இந்தியாவில் உள்ள பல முன்னணி நடிகர்கள் தங்களது சமூக வலைதளம் வாயிலாக பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

ஆனால் சூர்யா அறிமுகமான படத்தில் அவருக்கு சுத்தமாக நடிப்பு வரவில்லை. இதனால் கடுப்பில் இருந்த நேருக்கு நேர் பட இயக்குனர் வசந்த், சூர்யா சாப்பிடும் போது அவரை திட்டி விட்டாராம்.

படப்பிடிப்பு இடைவெளியில் பிரியாணி நன்றாக இருப்பதாக இயக்குனரிடம் தெரிவித்துள்ளார் சூர்யா. ஆனால் அதற்கு வசந்த், நீ சாப்பிடத்தான் கரெக்ட், மத்தபடி எதுக்கும் ஒத்து வர மாட்ட என திட்டி விட்டாராம்.

இதற்காக விடிய விடிய கண்ணீர் விட்டு கதறி உள்ளார் சூர்யா. இதனை பிரபல நாளிதழ் ஒன்றுக்கு சூர்யா பேட்டி கொடுத்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அவர் திட்டிய போது இருந்த கவலை தற்போது அவர் வாழ்த்தில் மறைந்து விட்டது என குறிப்பிட்டுள்ளார் சூர்யா.

suriya-vasanth-cinemapettai

suriya-vasanth-cinemapettai

Continue Reading
To Top