fbpx
Connect with us

Cinemapettai

முருகதாஸை குறைச்சு எடை போடாதீங்க.. தளபதி 65 வேற லெவல்ல இருக்கப்போகுது என எச்சரித்த பிரபலம்

Tamil Cinema News | சினிமா செய்திகள்

முருகதாஸை குறைச்சு எடை போடாதீங்க.. தளபதி 65 வேற லெவல்ல இருக்கப்போகுது என எச்சரித்த பிரபலம்

சமீபகாலமாக முருகதாசுக்கு ஏழரை சனி உச்சத்தில் இருக்கிறது. அவர் இயக்கும் படங்களும் பெரிதாக வெற்றிகளை பெறுவதில்லை. அது மட்டுமல்லாமல் அவரது சம்பளத்தை குறிவைத்தே பலரும் தாக்கி வருகின்றனர். இதனால் நொந்து போயுள்ள முருகதாஸ் தற்போது விஜய்யின் தளபதி 65 படத்தை இயக்கும் வாய்ப்பைப் பெற்றுள்ளதாக செய்திகள் கிடைத்துள்ளது.

இன்னும் அதிகாரப்பூர்வமாக வெளியிடவில்லை என்றாலும் அரசல் புரசலாக செய்திகள் வெளிவந்து விட்டது. தளபதி 65 படம் புது கதையா அல்லது துப்பாக்கி படத்தின் இரண்டாம் பாகமா என ரசிகர்கள் குழப்பத்தில் உள்ளனர். பெரும்பாலான சினிமா வினியோகஸ்தர்களுக்கு விஜய், முருகதாசுடன் இணைந்தது அவ்வளவு ஒன்றும் திருப்தியாக இல்லை என்பதை அவர்கள் கொடுக்கும் பேட்டியில் இருந்தே தெரிகிறது.

இந்நிலையில் முருகதாஸின் முன்னாள் அசிஸ்டெண்ட் இயக்குனரும், தற்போதைய சூப்பர் ஹிட் இயக்குனருமான அஜய் ஞானமுத்து சமீபத்தில் ஒரு யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்தார். அதில் முருகதாஸுடன் அவர் பணியாற்றிய அனுபவத்தைப் பகிர்ந்துகொண்டார்.

அதில் அவர், முருகதாஸை குறைத்து மதிப்பிட வேண்டாம் எனவும், ஒரு முறை அடி வாங்கினால், திரும்ப எப்படி அடி கொடுப்பது என்பது அவருக்கு நன்றாகவே தெரியும் எனவும் குறிப்பிட்டுள்ளார். மேலும் தளபதி 65 படம் கண்டிப்பாக மிரட்டலாக இருக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.

இதனைக் கேட்ட தளபதி ரசிகர்கள் உற்சாகமடைந்தனர். அஜய் ஞானமுத்து தற்போது விக்ரம் நடிக்கும் கோப்ரா படத்தை இயக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Continue Reading
To Top