Tamil Cinema News | சினிமா செய்திகள்
பயோபிக் வேண்டாமே – நாசூக்காய் வேண்டுகோள் வைத்த சேதுவின் பாவரிட் இயக்குனர்
கிரிக்கெட் விளையாட்டு உலகில் மிகப்பெரிய வியாபாரம். எனவே அதில் உள்ள வீரர்களின் வாழ்க்கையை படமாக்கி பணம் குவிக்க முடியும். இதற்கு தோனி படம் ஒரு எடுத்துக்காட்டு. அதே ஸ்டைலில் கபில் தேவின் உலகக்கோப்பை வென்ற சாதனையை மையப்படுத்தி 83 என்ற படமும் ரெடி ஆகி உள்ளது.
தனது சுழற்பந்தால் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் 800 விக்கெட்டுகளை வீழ்த்தி கெத்து காட்டியவர் தான் இலங்கையின் முத்தையா முரளிதரன். இவரது வாழ்க்கை படமாகிறது. முத்தையாவின் வாழ்க்கை வரலாற்று படத்தில் விஜய் சேதுபதி நடிப்பதாக கடந்த வருடமே தகவல்கள் வெளியானது. இந்த படத்தில் முதலில் நடிக்க மறுத்ததாகவும், பின்பு ஒத்துக் கொண்டதாகவும் விஜய் சேதுபதி தெரிவித்தார்.
இந்த பட போஸ்டரை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு, ‘இந்த மைல்கல் படத்தில் ஒரு பகுதியாக இருப்பதில் பெருமையாக உள்ளது. படத்தின் அப்டேட் விரைவில் வரும்’ என பதிவிட்டார் விஜய் சேதுபதி.
முத்தையா முரளிதரன் படத்தில் விஜய் சேதுபதி நடிக்க கூடாது என்று சில அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். கட்சிகள் என்பது மட்டுமன்றி சில ரசிகர்கள், சமூக ஆர்வலர்களுக்கும் இந்த படம் சற்றே வருத்தத்தை கொடுத்துள்ளது.

Vijay Sethupathi Seenu Ramasamy
விஜய் சேதுபதி இன்று சினிமாவில் கலக்கி வருவதற்கு அவருக்கு மிகவும் உறுதுணையாக இருந்தது இயக்குனர் சீனு ராமசாமி தான். தென் மேற்கு பருவக்காற்று, தர்மதுரை, இடம் பொருள் ஏவல், மாமனிதன் என சேதுவை வைத்து படம் எடுத்தவர். சேதுவை மக்கள் செல்வன் என அழைக்க ஆரம்பித்ததும் இவர் தான்.
தனது ஆதங்கத்தை ட்விட்டரில் பின் வருமாறு பதிவிட்டுள்ளார்.

seenu ramsamy tweet
ஈழத்தமிழர் உள்ளத்திற்கு அருமருந்து தரும் வகையில் நடிக்கும் நீ ஏன் மா (மு)த்தையாவாக நடிக்கிறாய் என கேட்டுள்ளார். இந்த பதிவு வைரலாகி வருகின்றது. தன் நலம் விரும்பிகள் மனது கோணாதபடி நடப்பவர் விஜய் சேதுபதி. அவர் என்ன முடிவு எடுப்பார் என பொறுத்திருந்து பார்ப்போம்.
