Tamil Cinema News | சினிமா செய்திகள்
ரம்யா பாண்டியனை ஏமாற்றிய பிரபல தமிழ் இயக்குனர் இவரா? அடப்பாவமே!
தமிழ் சினிமாவில் ஒரு சில படங்களில் ஹீரோயினாக நடித்தவர் ரம்யா பாண்டியன். அவருடைய கவர்ச்சி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்ற அளவுக்கு அவருடைய நடிப்பு ரசிகர்களிடம் வரவேற்பை பெறவில்லை.
இந்நிலையில் விஜய் டிவி, ஒரு சில வருடங்களுக்கு ரம்யா பாண்டியனை குத்தகைக்கு எடுத்து விட்டது போல.
குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளராக களமிறக்கிய விஜய் டிவி,அதனைத் தொடர்ந்து காமெடி ஷோ ஒன்றில் நடுவராக மாற்றினர். ரம்யாவுக்கு அப்படி என்ன காமெடி தெரியுமோ தெரியவில்லை.
இது ஒருபுறமிருக்க தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சியில் களம் இறக்கி விட்டுள்ளது விஜய் டிவி. ஆரம்பம் முதலே ரம்யா பாண்டியனுக்கு அதிக அளவில் சொம்படித்து வருவதாக சமூக வலைதளங்களில் பேச்சு.

ramya-pandian-cinemapettai
இந்நிலையில் சமீபத்தில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பிரபல தமிழ் இயக்குனர் ஒருவரை நம்பி ஏமாந்து விட்டதாக ரம்யா பாண்டியன் கூறியது அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அனேகமாக அது பாலாஜி சக்திவேல் என்பவர் ஆகத்தான் இருக்கும் என்கிறார்கள். காரணம் ரம்யா பாண்டியன் முதன்முதலில் அறிமுகமாக இருந்த ரா ரா ரா ராஜசேகர் என்ற படத்தை இயக்கியவர் அவர்தான்.
ஒரு நாள் மட்டும் ரம்யா பாண்டியனை நடிக்க வைத்து விட்டு பின்னர் நாயகியை மாற்றி விட்டார்களாம். இதனைக் கேட்ட ரசிகர்கள் ஐயோ பாவம் என கண்ணீர் விட்டு கதறுகின்றனர்.
