Connect with us
Cinemapettai

Cinemapettai

ajith-arm-cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

முருகதாஸால் அஜித் பட வாய்ப்பை இழந்தேன்.. 20 வருடங்கள் கழித்து புலம்பும் பிரபல இயக்குனர்

தமிழ் சினிமாவில் தான் எடுத்த முதல் படமே சங்கரருக்கு இணையாக மிகப்பெரிய பிரம்மாண்ட படமாக எடுத்த இயக்குனர் ஒருவர் ஏ ஆர் முருகதாஸால் தல அஜித் பட வாய்ப்பு பறிபோய்விட்டது என சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

தல அஜித் தமிழ் சினிமாவின் உச்ச நடிகர்களில் ஒருவர். அஜித்துடன் படம் செய்ய வேண்டும் என பல இயக்குனர்கள் ஆர்வமாக இருக்கின்றனர். இவ்வளவு ஏன் ஒரு காலத்தில் அஜீத்தை வைத்து படம் இயக்க ஆசைப்பட்ட பல இயக்குனர்களும் தற்போதும் வாய்ப்பு கிடைக்க பல முயற்சிகளை செய்து வருகின்றனர்.

அந்த வகையில் அஜித்தின் ஆரம்ப காலகட்டங்களில் வெற்றி தோல்வி என மாறி மாறி இருந்த காலகட்டங்களும் உண்டு. தொடர் தோல்விகள் கொடுத்த காலமும் உண்டு. ஆனால் அப்போதெல்லாம் அவரது ரசிகர்கள் அவர் உடன்நின்று தற்போது அவரை உச்ச நடிகர்களில் ஒருவராக்கி உள்ளனர்.

அப்பேர்ப்பட்ட ஒருவரை வைத்து படம் இயக்க யாருக்கு தான் ஆசை இருக்காது. அப்படி அஜித்தின் வளர்ந்து வரும் கால கட்டங்களில் அஜீத்தை வைத்து படம் இயக்க வேண்டும் என்று ஆசைப்பட்டவர் தான் இயக்குனர் பிரவீன் காந்தி.

இவர் ரட்சகன், ஜோடி போன்ற பல படங்களை கொடுத்துள்ளார். அஜீத்திடம் கதை சொல்லி சூட்டிங் தேதியை குறித்த நிலையில் கடைசி மூன்று நாட்களில் பிரவீன் காந்தியின் உடன் வேலை செய்த சிலர் அவரைப் பற்றி தவறாக பேச உடனடியாக இயக்குனரை மாற்றி விட்டாராம் தல அஜித்.

அந்த மாற்றப்பட்ட இயக்குனர்தான் ஏ ஆர் முருகதாஸ். இவர் பிரவீன் காந்தியின் அசிஸ்டன்ட் டைரக்டர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதனால் அசிஸ்டன்ட் டைரக்டரின் வாழ்க்கை கெட்டு விடக் கூடாது என்பதற்காக அஜித்திடம் அந்த படத்தையே ஏன் நிராகரித்தீர்கள்? என்றுகூட கேட்காமல் விட்டுக் கொடுத்து விட்டாராம்.

ajith-cinemapettai

ajith-cinemapettai

Continue Reading
To Top