தமிழ் சினிமாவில் ஒளிப்பதிவாளர், நடிகர், தயாரிப்பாளர், இயக்குனர் என பல பரிமாணங்களைக் கொண்டு பணியாற்றுபவர் தான் வேலு பிரபாகரன். இவரது படங்கள் பெரும்பாலும் நாத்திகம் மற்றும் புரட்சிகர செய்திகளை கொண்டிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் வேலுபிரபாகரன் ‘நாளைய மனிதன்’ என்ற திரைப்படத்தின் மூலம் தான் தமிழ்த் திரையுலகில் இயக்குனராக கால்பதித்தார். என்னதான் பல ஹிட் படங்களை வேலு பிரபாகரன் தந்திருந்தாலும், இவர் தமிழ் சினிமாவில் சர்ச்சையான இயக்குனர் என்ற பெயரையும் பெற்றிருக்கிறார்.
தற்போது வேலு பிரபாகரன் தன்னுடைய பேஸ்புக் பக்கத்தில், தன்னுடைய படத்தில் நடிப்பதற்காக நடிகையை தேடி அலைந்தது பற்றிய பதிவு ஒன்றை பதிவிட்டிருக்கிறார்.
அந்தப் பதிவில் வேலு, தனது படத்தில் நடிக்க புதுமுக நடிகைகள் கூட நடிக்க மறுப்பது சற்று வேடிக்கையாக இருப்பதாகவும், தான் ஆபாச படம் எடுக்கும் இயக்குனர் என்பதை சமூக ஊடகங்கள் மூலம் பல முட்டாள் சினிமாக்காரர்களும் அறிவற்ற ஊடகங்களும் பரப்பி இருப்பது தான் இதற்கு முக்கிய காரணம் என்றும் பதிவிட்டிருக்கிறார்.
அதுமட்டுமில்லாமல், ‘கட்டாயமாக இவை அனைத்தையும் எதிர்த்து ஜெயிப்பேன்’ என்றும் குறிப்பிட்டிருக்கிறார் வேலுபிரபாகரன். அதேபோல், தனது புதிய படத்தில் கவிதா இணைந்து இருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார்.
மேலும் வேலுபிரபாகரனின் படங்களில் நடிகைகள் நடிக்க மறுப்பதற்கு மிக முக்கிய காரணமாக கருதப்படுவது, 60 வயதில் மூன்றாவதாக தனது படத்தில் நடித்த நடிகையை திருமணம் செய்த கொண்டதுதான் என்று சொல்லப்படுகிறது.
தற்போது வேலுபிரபாகரனின் இந்த பதிவு வைரலாகி வருவதோடு, நெட்டிசன்களின் ஏகபோகமாக பக்கங்களையும் சந்திக்கிறது.