Connect with us

Tamil Cinema News | சினிமா செய்திகள்

தனுசை ஒத்த வீடு வாங்க விடமாட்டேன்.. சவால் விடும் இயக்குனர்

dhanush

உலக சினிமாவில் முக்கிய நடிகராக இடம்பெற்றுள்ள தனுஷை கண்டிப்பாக ஒரு வீடு கூட வாங்க விடமாட்டேன் என இயக்குநர் ஒருவர் சவால் விட்டுள்ளது அவரது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தனுஷின் சினிமா வளர்ச்சியை புகழ்ந்து புகழ்ந்து வாய் தான் வலிக்கிறது. அந்த அளவுக்கு ஒரு மனுஷன் கடந்த சில வருடங்களில் மற்றும் பாலிவுட் ஹாலிவுட் என கலக்கிக் கொண்டிருக்கிறார்.

அதுவும் பேருக்கு ஒரு படம் நடித்துவிட்டு வரவில்லை. தான் செல்லும் அனைத்து மொழிகளிலும் தொடர்ந்து படங்கள் செய்யும் அளவுக்கு தரமான வெற்றிகளை கொடுத்து வருகிறார்.

அந்த வகையில் பாலிவுட்டில் அடுத்ததாக அட்ராங்கிரே என்ற படம் வெளியாக உள்ளது. இந்த படத்தில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் அக்ஷய் குமார், சாரா அலி கான் போன்றோர் நடித்து வருகின்றனர்.

இந்நிலையில் பிரபல பாலிவுட் இயக்குனர் ஒருவர் தனுசை மும்பையில் வீடு வாங்க விடமாட்டேன் என கூறியுள்ளார். அதற்கு அவர் கூறிய காரணம் தான் அனைவரையும் நெகிழ வைத்துள்ளது.

தனுஷின் பாலிவுட் ஃபேவரட் இயக்குனர் ஆனந்த் எல் ராய். தனுஷ் தனக்கு தம்பி மாதிரி எனவும், எப்போது அவர் மும்பைக்கு வந்தாலும் என்னுடைய வீட்டில் தான் தங்க வேண்டும், இதன் காரணமாகவே அவர் மும்பையில் புதுவீடு வாங்க நினைத்தால் கண்டிப்பாக சப்போர்ட் செய்ய மாட்டேன் எனக் குறிப்பிட்டுள்ளார்.

dhanush-anand-l-rai-cinemapettai

dhanush-anand-l-rai-cinemapettai

Continue Reading
To Top