Tamil Cinema News | சினிமா செய்திகள்
ராதிகாவை பாஞ்சாலி என்ற பிரபல இயக்குனர்.. வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சி விட்டாரே!
நடிகை ராதிகா தமிழ் சினிமாவில் அறிமுகமாகி கிட்டத்தட்ட 42 வருடங்களான நிலையில் அதனை தனது சமூக வலைதள பக்கங்களில் தெரிவித்து வந்தார். மேலும் இதற்கு பல நடிகர் நடிகைகள் வாழ்த்து தெரிவித்தனர்.
42 ஆண்டு காலம் சினிமாவில் ஒரு வருடம் கூட ராதிகா நடிக்காமல் இருந்ததில்லை என்பதுதான் தற்போது மிகவும் ஹாட்டான செய்தியாக வலம் வருகிறது.
ராதிகா திரையில் மட்டும் அல்லாமல் நிஜ வாழ்க்கையிலும் பல்வேறு சர்ச்சைகளை சந்தித்துள்ளார். அதுமட்டுமில்லாமல் தனது திருமண வாழ்க்கையில் பல்வேறு கசப்பான சம்பவங்களை அவர் சந்தித்துள்ளார்.
கிட்டத்தட்ட மூன்று முறை திருமணம் செய்துள்ள ராதிகா, 3வது கணவரான சரத்குமாருடன் தான் நீண்ட காலம் வசித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் நடிகை ராதிகா 42 வருட சினிமா வாழ்க்கையை வாழ்த்தும் விதமாக இயக்குனர் பாரதிராஜா தனது ட்விட்டர் பக்கத்தில், பாஞ்சாலியின் பயணம் இன்னும் முடியவில்லை என தெரிவித்துள்ளார்.
பாஞ்சாலி படத்தில் ராதிகா நடித்ததை குறிப்பிட்டு இருந்தாலும் பாஞ்சாலி என்ற வார்த்தை தற்போது சமூக வலைத்தளங்களில் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
