Tamil Cinema News | சினிமா செய்திகள்
கூட ஆடும் பெண்களை ஆபாச படம் பார்க்க சொல்லி கட்டாயப்படுத்தும் பிரபல நடன இயக்குனர்.. அடச்சீ
பிரபல பாலிவுட் நடன இயக்குனர் கணேஷ் ஆச்சார்யா மீது நடன பெண்ணொருவர் மும்பையில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கணேஷ் ஆச்சர்யா மீது ஏற்கனவே சம்பளத் தொகையை சரியாக கொடுப்பதில்லை என்ற புகார் இருந்து வந்தது. அதை மும்பை நடன இயக்குனர்கள் சங்கம் கண்டிக்காமல் விட்டதால் அவரின் சேட்டைகள் அத்து மீறி வருகிறாராம்.
தயாரிப்பாளர்களிடம் இருந்து வரும் பணத்தில் தனது நடன பணியாளர்களுக்கு கமிஷன் பிடித்தது போக தான் மீதியை தருகிறாராம். கூட ஆடும் பெண்கள் யாரேனும் அழகாக இருந்தால் உடனே அவர்களை ஆபாச வீடியோக்கள் பார்க்கச் சொல்லி துன்புறுத்துகிறார் எனவும் புகார்கள் எழுந்துள்ளன.
கணேஷ் ஆச்சர்யா மீது பல குற்றச்சாட்டுகள் தொடர்ந்து எழுந்த வண்ணம் உள்ளதால் நடன குழு என்ன செய்வது என்று தெரியாமல் முழித்துக் கொண்டிருக்கிறார். கண்டிப்பாக அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படுமென உறுதி அளித்திருக்கிறார்கள்.
இந்த வழக்கை ஏற்று மும்பை காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
