அம்மாடியோ! ஜெயிலர் ஓடிடி உரிமை இத்தனை கோடியா.? தட்டி தூக்கிய நிறுவனம், ரிலீசில் ஏற்பட்ட சிக்கல்

Jailer: ஜெயிலர் வெளியாகி 18 நாட்கள் கடந்த நிலையிலும் இன்னும் ஆரவாரம் குறையாமல் தான் இருக்கிறது. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் வேற லெவலில் மாஸ் காட்டி இருந்த இப்படம் இந்தியா மட்டுமல்லாமல் உலக அளவில் தன் வெற்றி கொடியை நாட்டியிருக்கிறது.

இப்படி ஒரு பலத்த வரவேற்பை எதிர்பார்க்காத தயாரிப்பு தரப்பு இப்போது வசூல் மழையில் திக்கு முக்காடி போயிருக்கிறது. அதன்படி ஜெயிலர் வெளியான முதல் வாரத்திலேயே 375 கோடி வசூலை நெருங்கிய நிலையில் இப்போது வரை 566 கோடிகளை வசூலித்து கெத்து காட்டிக்கொண்டிருக்கிறது.

Also read: 18வது நாள் கடந்து ஜெயிலர் செய்த மொத்த வசூல் ரிப்போர்ட்.. தனிக்காட்டு ராஜாவாக ஆட்டம் போடும் ரஜினி

இதில் தமிழ்நாடு மட்டுமல்லாமல் கேரளா, ஆந்திரா, பெங்களூரு உள்ளிட்ட இடங்களிலும் வசூல் தாறுமாறாக இருப்பது பலரையும் ஆச்சரியப்படுத்திக் கொண்டிருக்கிறது. அந்த வகையில் திரையரங்குகளில் சக்கை போடு போட்டுக் கொண்டிருக்கும் ஜெயிலர் எப்போது ஓடிடி தளத்தில் வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு தான் இப்போது அதிகமாக இருக்கிறது.

அதன்படி இப்படத்தின் ஓடிடி உரிமையை பிரபல நெட்பிளிக்ஸ் நிறுவனம் பல கோடிகளை கொடுத்து தட்டி தூக்கி இருக்கிறது. டாப் ஹீரோக்களின் படங்களை தொடர்ச்சியாக கைப்பற்றி வரும் இந்த நிறுவனம் ஜெயிலர் படத்தையும் 100 கோடி கொடுத்து வாங்கி இருப்பதாக கூறப்படுகிறது. அதனாலேயே விரைவில் படத்தை தங்களுடைய தளத்தில் வெளியிடவும் அவர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

Also read: ஜெயிலர் ஓரமா போங்க என செப்டம்பர் முதல் வாரம் வெளிவரும் 6 படங்கள்.. முட்டி மோதி ஜெயிக்கப் போவது இவர்தான்

ஆனால் அதில் தான் தற்போது ஒரு சிக்கல் ஏற்பட்டுள்ளது. என்னவென்றால் ஜெயிலர் வெளியாகி இரண்டு வாரங்கள் கடந்த நிலையிலும் திரையரங்குகளை ஆக்கிரமித்துக் கொண்டிருக்கிறது. இந்த நேரத்தில் ஓடிடி தளத்தில் படம் வெளியானால் வசூலுக்கு மிகப்பெரும் பாதிப்பு ஏற்படும். அதனாலேயே சன் பிக்சர்ஸ் தற்போது ரிலீஸ் தேதியை தள்ளி வைக்குமாறு நெட்பிளிக்ஸ் நிறுவனத்திடம் கோரிக்கை வைத்திருக்கிறார்களாம்.

அதை ஏற்றுக் கொண்ட நிறுவனமும் தற்போது ஜெயிலரை செப்டம்பர் 15ஆம் தேதி வெளியிடுவதற்கு முடிவு செய்திருக்கிறது. அந்த வகையில் முத்துவேல் பாண்டியனின் அலப்பறையை பார்க்கும் ஆவலில் இருந்த ரசிகர்கள் இன்னும் சில வாரங்கள் காத்திருக்க வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டு இருக்கிறார்கள்.

Also read: சமீபத்திய தியேட்டர் ரிலீஸில் பட்டையை கிளப்பிய 6 படங்கள்.. வசூலில் வாயடைக்க செய்த ஜெயிலர்

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்