fbpx
Connect with us

Cinemapettai

விஜய் பட வாய்ப்பை இரண்டு முறை தவறவிட்ட சூப்பர் டூப்பர் ஹிட் இயக்குனர்.. இப்போ புலம்பி என்ன பயன்!

Tamil Cinema News | சினிமா செய்திகள்

விஜய் பட வாய்ப்பை இரண்டு முறை தவறவிட்ட சூப்பர் டூப்பர் ஹிட் இயக்குனர்.. இப்போ புலம்பி என்ன பயன்!

கடந்த சில வருடங்களில் இந்திய அளவில் மிகப்பெரிய வளர்ச்சி அடைந்த நடிகர் என்றால் அது தளபதி விஜய் தான். தொடர்ந்து சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து வசூலில் அனைவரையும் ஆச்சரியப்பட வைத்திருக்கிறார்.

அதுமட்டுமில்லாமல் நாளுக்கு நாள் விஜய்யின் ரசிகர் கூட்டம் தமிழ்நாடு மட்டும் இல்லாமல் அனைத்து மாநிலங்களிலும் கணிசமாக உயர்ந்து கொண்டே செல்கிறது.

இன்னும் சொல்லப் போனால் தளபதி விஜய்தான் தற்போதைக்கு தமிழ் சினிமாவில் அதிக மார்க்கெட் உள்ள நடிகர் என்பதும் குறிப்பிடத்தக்கது. அடுத்ததாக விஜய் நடிப்பில் மாஸ்டர் படம் வெளிவர காத்துக் கொண்டிருக்கிறது.

இந்நிலையில் பிரபல கமர்ஷியல் இயக்குனர் ஒருவர் தளபதி விஜய்யுடன் இணைந்து பணியாற்ற இருந்த 2 பட வாய்ப்புகளை தவற விட்டது என் தவறுதான் என்று கூறியுள்ளது விஜய் ரசிகர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஒரு காலத்தில் பக்கா கமர்சியல் இயக்குனராக வலம் வந்தவர் கேஎஸ் ரவிக்குமார். இவர் இயக்கியதில் பல படங்கள் சூப்பர் டூப்பர் வெற்றியை பெற்றுள்ளன.

இவர் ஏற்கனவே தளபதி விஜய்யை வைத்து மின்சார கண்ணா எனும் படத்தை இயக்கியிருந்தார். அந்த படம் பெரிய அளவு வெற்றியை பெறவில்லை என்றாலும் கணிசமான வரவேற்ப்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.

அதன்பிறகு தளபதி விஜய்யுடன் இரண்டு முறை படம் இயக்கும் வாய்ப்பு கிடைத்தும் சில குளறுபடிகளால் படங்களை ஏற்க முடியவில்லை என கூறியுள்ளது தளபதி ரசிகர்களை சோகமடைய வைத்துள்ளது.

அன்றைய காலகட்டங்களில் கமல்ஹாசன் மற்றும் ரஜினிகாந்த் ஆகிய இருவருக்கும் மெகா ஹிட் படங்களை கொடுத்து வந்தவர் கேஎஸ் ரவிக்குமார் என்பதை மறந்து விடக்கூடாது.

Continue Reading
To Top