fbpx
Connect with us

Cinemapettai

வலிமை படத்தில் அஜித்துடன் இணைந்த பிரபல காமெடியன்.. மீண்டும் ரகளை செய்ய ரெடியான தல

Tamil Cinema News | சினிமா செய்திகள்

வலிமை படத்தில் அஜித்துடன் இணைந்த பிரபல காமெடியன்.. மீண்டும் ரகளை செய்ய ரெடியான தல

தல அஜித் தற்போது எச் வினோத் இயக்கத்தில் வலிமை படத்தில் நடித்து வருகிறார். போனி கபூர் தயாரிக்கும் இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்க உள்ளார். வலிமை படத்தின் படப்பிடிப்பு தற்போது ஸ்விட்சர்லாந்தில் நடைபெற்று வருகிறது.

நீண்ட நாட்களுக்கு பிறகு போலீஸ் அதிகாரியாக களமிறங்கியிருக்கும் தல அஜித் எடையை குறைத்து கட்டுமஸ்தான உடலுடன் வலிமை படத்தில் நடித்து வருகிறார். மேலும் வலிமை படத்தில் முழுக்க முழுக்க ஆக்ஷன் காட்சிகள் இருந்தாலும் சென்டிமெண்ட் மற்றும் காமெடி காட்சிகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளதாக வலிமை பட வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

விஸ்வாசம் படத்தைத் தொடர்ந்து தற்போது தல அஜித்துடன் நடிக்க உள்ளார் யோகிபாபு. தல அஜித்தின் ஃபேவரைட் காமெடியனாக மாறியிருக்கும் யோகிபாபுவை ரெகமெண்ட் செய்ததே தல அஜித் தானாம். இதனால் தற்போது யோகிபாபு முன்னணி நடிகர்கள் அனைவருக்கும் செல்லப்பிள்ளையாக வலம் வருகிறார்.

தற்போது சுவிட்சர்லாந்தில் கார் ரேஸ் மற்றும் பைக் ரேஸ் போன்ற காட்சிகளை படமாக்கி வரும் படக்குழு விரைவில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பை முடித்துவிட்டு சென்னை திரும்ப உள்ளது குறிப்பிடத்தக்கது. வலிமை படம் 2020 தீபாவளிக்கு வருகிறது என்பது அனைவரும் அறிந்த விஷயமே.

புது மாப்பிள்ளைக்கு பப்பப்பரே.. நல்ல யோகமடா பப்பப்பரே..

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top